Karnataka Election Results: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! மக்களின் முடிவு வெளியாகும் நேரம் இது

Karnataka Election Result 2023: தங்கள் பலத்தை நிரூபிக்க அனைத்து விதங்களிலும் பிரம்ம பிரயர்த்தனம் செய்துவிட்டு, அதன் முடிவு சாதகமா பாதகமா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 13, 2023, 10:50 AM IST
  • கர்நாடக தேர்தல் முடிவு சாதகமா பாதகமா?
  • ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள்
  • மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! தீர்ப்பை வழங்கிய மக்களின் எதிர்பார்ப்பு
Karnataka Election Results: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! மக்களின் முடிவு வெளியாகும் நேரம் இது title=

பெங்களூரு: இந்தியாவில் உள்ள அனைத்து  அரசியல் கட்சிகளும், மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரத் தொடங்கிவிடும். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி, அனைத்துக் கட்சிகளும் கர்நாடகா மாநிலத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க அனைத்து விதங்களிலும் பிரம்ம பிரயர்த்தனம் செய்துவிட்டு, அதன் முடிவு சாதகமா பாதகமா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வழக்கமாக நடைபெறும் மாநில  சட்டமன்ற தேர்தல்களில் இருந்து கர்நாடக  தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் என்றும், கர்நாடக மாநிலத்தில் பாஜக  இம்முறை பெரிய அளவிலான பின்னடைவை  சந்திக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இதுபோன்ற கருத்து கணிப்புகள் வெளியான சில நாட்களில் வந்த கருத்துக் கணிப்புகள் சற்று மாறுபட்டு இருந்தது. இது, கர்நாடகாவை மறுபடியும் கைப்பற்றும் தீவிரத்தில் இருக்கும் பாஜக அதிக உத்வேகத்துடன் இயங்க வெறியை ஏற்படுத்தியது என்றால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்பு, இந்த வெற்றி அவசியம் என்பதால், காங்கிரஸின் முனைப்பும் அதிகரித்துவிட்டது.

இதனால்  கர்நாடக தேர்தல் களம் முழுக்க, தீவிரமான பிரச்சாரங்களும், சாலைப் பேரணிகளும் நடத்தப்பட்டன. பொதுவாக  தேர்தலின் போது, ஆளும் கட்சியினர், தாங்கள் செய்த மக்கள் நல திட்டங்களை முன்வைத்தும், எதிர்க் காலத்தில்  செய்ய உள்ள திட்டங்களை அறிவிப்பதும் தான்  வழக்கம்.
ஆனால் பாஜகவின் தேர்தல் அணுகுமுறையோ, முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

மேலும் படிக்க | Karnataka New CM: இந்த ஐவரில் ஒருவரே கர்நாடகாவின் புதிய முதலமைச்சர்!

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து , இந்துக்களின் பாதுகாவலர்கள் என கூறிக்கொண்டு பிரசார யுக்தியை பாஜக வகுத்தது. லிங்காயத்,  ஒக்காலாயக் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியது.

தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடகாவின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராமரை பூட்டி வைத்தது போல், ஆஞ்சநேயரையும் பூட்டி வைக்க காங்கிரஸ் நினைப்பதாக பேசினார். சில வாரங்களுக்கு முன்னர் தான், தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய பரப்புரைக்காக, எதிர்கட்சி காங்கிரஸின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் எதிரொலி கர்நாடக தேர்தலில் அனைவருக்கும் எச்சரிக்கை கொடுத்திருக்கும் என்ற நினைப்பு பொய்யானது என்றே சொல்லலாம். 

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெய் பஜ்ரங்பலி என்ற முழக்கங்களும், புதிய கோவில் நிர்மாணிக்கும் அறிவிப்புகளும், போட்டியாளர்களிடையே பலத்த போட்டியை உருவாக்கியது. 

மேலும் படிக்க | Karnataka Election Result 2023 Live: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை அப்டேட்

'மத நல்லிணக்கத்தையும் ஜனநாயக மாண்புகளையும் காப்போம்' என்றே மக்கள் பிரதிநிதிகள் உறுதிமொழி ஏற்பார்கள், என பிரதமரின் ஜெய் பஜ்ரங்பலி முழகக்த்தைப் பர்றி குறிப்பிட்ட சரத் பவார், அதற்கு மாறாக பொதுமேடையில் மத முழக்கத்தை பிரதமர் எழுப்பி இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று எச்சரித்தார். 

இப்படி, தேர்தல் பிரச்சாரங்களில் மதம், இனம், இட ஒதுக்கீடு, நலத்திட்டங்கள் என அனைத்து கட்சியினரும் வாக்குறுதிகளை அளித்தனர். அதன் எதிரொலி, வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா? இல்லை மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களா? என்பதை தெரிந்துக் கொள்ள மக்களும், அரசியல் நிபுணர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில், கர்நாடக தேர்தல் களத்தின் சுவாரசியங்கள் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், இந்த தேர்தலில் இருந்து கிடைத்த பாடங்களே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வியூகம் வகுக்க பயன்படும் என்பதால், இந்தியாவின் கவனம், கர்நாடக மாநில தேர்தல் முடிவுகளை நோக்கி குவிந்துளது. 

பல்வேறு இனம்,சாதி,  மொழி, கலாச்சாரங்களில் மாறுபட்ட மக்களை உள்ளடக்கிய இந்தியா போன்ற நாடுகளில் கர்நாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற வியூகங்களே, அடுத்த தேர்தலிலும் தொடரும் என்பதன் அடிப்படையில் இன்றைய தினம், இந்தியாவின் முக்கிய தேர்தல் தீர்ப்பு நாள் என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | கர்நாடக தேர்தல் 2023: 10 விஐபி வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News