மகாராஷ்டிராவில் அரசியல் எழுச்சிக்கு மத்தியில் பாஜக MLA காளிதாஸ் கோலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மையினை நிரூபிக்க ஒரு நாள் அவகாசம் கொடுத்து செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, இடைக்கால சபாநாயகருக்கான போட்டியில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இடம் பெற்றனர்.
காங்கிரஸ் மாநிலப் பிரிவின் தலைவரும், சட்டமன்றக் கட்சியின் தலைவருமான பாலாசாகேப் தோரத்தை ஒரு சார்பு இடைக்கால சபாநாயகராக மாற்ற முயற்சித்தனர். ஆனால் இந்த பந்தயத்தில், பாஜக MLA காளிதாஸ் முதல் இடத்தை தற்போது பெற்றுள்ளார்.
இன்று மகாராஷ்டிராவில் நிறைய அரசியல் எழுச்சிகள் உண்டாகின. குறிப்பாக அஜித் பவார் மாநில துணை முதல்வர் பதவியை ராஜினாமா திடீரென ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூம் தனது பதவியினை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதனிடையே தற்போது மகாராஷ்டிர சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக தற்போது பாஜக-வின் MLA காளிதாஸ் கோலம்ப்கர் பதவியேற்றுள்ளார்.
முன்னதாக அஜித் பவார் தேவேந்திர பட்னவிஸை ஆதரித்த நிலையில் சனியன்று காலை முதல்வர், துணை முதல்வர் பதவியினை முறையே பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஏற்றுக்கொண்டனர். என்றபோதிலும் இன்று, பதவியேற்ற நான்காவது நாளில், இரு தலைவர்களும் தங்கள் பயணத்தை 80 மணி நேரத்தில் முடித்துக்கொண்டனர்.
இதனிடையே பாஜக-அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
நீதிபதி NV ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது சிவசேனா, காங்கிரஸ் சார்பில் கபில் சிபல், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி, பாஜக சார்பில் முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று (நவம்பர் 26) இவ்வழக்கு தொடர்பான உத்தரவினை அறிவித்தனர்.
நீதிபதிகளின் அதிரடி உத்தரவின் படி மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நவம்பர் 27-ஆம் தேதி (நாளை) நடத்த வேண்டும். மேலும் சட்டசபை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவினை அடுத்து மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பதற்றம் ஒட்டிக்கொண்டுள்ளது.