புதுடெல்லி: ஜியோ வழங்கிவரும் இலவச சேவையை மார்ச் மாதம்வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சிம் கார்டுகளை வெளிபடுத்த ஆரம்பித்தது. எனவே இணையதளம், தொலைபேசி அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக வழங்கியது ஜியோ.
டிசம்பர் மாத இறுதியோடு இலவச சேவை முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இலவச சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை நீடிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. வரும் டிசம்பர் 3-ம் தேதிக்குள் ஜியோ சிம் வாங்குவோருக்குதான் இந்த சலுகை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி-ன் முக்கிய அம்சங்கள்:-
* 4ஜி சேவையில், 1ஜிபிக்கு ரூ.50 கட்டணம்.
* ரூ 149 திட்டத்தின் கீழ், இலவச வாய்ஸ் கால் (லோக்கல் மற்றும் எஸ்.டீ.டி), ரோமிங் கட்டணம் ரத்து, 100 எஸ்எம்எஸ் மேலும் 0.3ஜிபி டேட்டா வழங்கப்படும்.
* ரூ. 4,999 திட்டத்தின் கீழ், 75ஜிபி டேட்டா அத்துடன் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் இரவு டேட்டா வழங்கப்படுகிறது.
* மாணவர்களுக்கு கூடுதலாக 25 சதவித இணைய பயன்பாடு இலவசம்.
* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வை-பை வசதி.