ஜம்முவின் வரலாற்று சிறப்புமிக்க நகரத்தின் பெயர் மாற்றப்பட்டது; காரணம் என்ன?

ஜம்மு-வின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான சிட்டி சௌக் பெயரினை பாரத் மாதா சௌக் என பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தினை ஜம்மு நகரசபைக் கழகம் (JMC) நிறைவேற்றியுள்ளது.

Last Updated : Mar 2, 2020, 03:18 PM IST
ஜம்முவின் வரலாற்று சிறப்புமிக்க நகரத்தின் பெயர் மாற்றப்பட்டது; காரணம் என்ன? title=

ஜம்மு-வின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான சிட்டி சௌக் பெயரினை பாரத் மாதா சௌக் என பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தினை ஜம்மு நகரசபைக் கழகம் (JMC) நிறைவேற்றியுள்ளது.

கடந்த ஆண்டு ஜம்மு நகர உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் 75 வார்டுகளில் 43 இடங்களில் JMC வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

"ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர நாட்களில் சிட்டி சௌக்கில் கொடி ஏற்றும் விழாக்கள் நடைபெறும் போது, ​​மக்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிடுவதால், பெயர் மாற்றம் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது" என்று ஜம்முவில் துணை மேயர் பூர்ணிமா சர்மா கூறினார்.

"முன்னதாக செப்டம்பர் 6-ஆம் தேதி இதுதொடர்பான தீர்மானத்தை நகர சபை நகர்த்தியது, என்றபோதிலும் அது ஒத்திவைக்கப்பட்டது, இதனையடுத்து தீர்மானம் குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சாலை சவுக்கிற்கு அடல் சௌ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நகரின் மையத்தில் உள்ள இந்த சந்திப்பு ஜம்முவின் முக்கிய வணிக மையமாகும். இதன் காரணமாக இப்பகுதி ஜம்முவின் இதயம் எனவும் வர்ணிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அங்குள்ள பெயரில் மாற்றத்தை அறிவிக்க ஜம்மு நகராட்சி ஒரு அடையாள பலகையை நிறுவியுள்ளது.

நெரிசலான சந்திப்பு நகரத்தின் அரசியல் நடவடிக்கைகளின் மையமாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பல முக்கிய அரசியல்வாதிகள் இந்த சௌக்கில் உரைகளை நிகழ்த்தியுள்ளனர். ஜம்முவில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாட்களில் மூவர்ண கொடி ஏற்றி வைக்கும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News