Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 4, 2024, 08:42 AM IST
  • வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
  • 100க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் தலைவிதி இன்று முடிவு செய்யப்படும்.
  • EVM வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது title=

Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை அதாவது இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக உதம்பூர் மற்றும் லடாக் ஆகிய இடங்களின் முடிவுகள் வெளியாகும். அதன் பிறகு மீதமுள்ள ஜம்மு, அனந்த்நாக்-ரஜோரி, ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த நான்கு இடங்களில் வேட்பாளர்களின் எண்ணிக்கை 15க்கும் அதிகமாக இருப்பதால் இதற்கான முடிவுகள் வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படலாம். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் தலைவிதி இன்று முடிவு செய்யப்பட உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மக்களவைத் தேர்தல் முடிவுகள்:

கதுவாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கத்துவாவில் உள்ள அரசு பட்டயக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதற்காக கதுவா நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும், லடாக்கில் ஒரு தொகுதியிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது:
ஜம்மு-காஷ்மீரின் 5 மக்களவைத் தொகுதிகளிலும், லடாக்கின் ஒரு மக்களவைத் தொகுதியிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன் பிறகு EVM வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை: உதம்பூர் தேர்தல் அதிகாரி டாக்டர் ராகேஷ் மின்ஹாஸ் கூறுகையில், முதல் 10 ஆயிரத்து 600 தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் முடிவுகள் பகிரப்படும். சுமார் 20700 EVM இயந்திரங்கள் கத்துவா அரசு டிகிரி கல்லூரியில் உள்ளன.

மேலும் படிக்க | Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம் - ஏன்?​

முழுமையான விசாரணைக்குப் பின்னரே அனுமதி கிடைக்கும்: வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரத் தொடங்கியுள்ளனர். முழுமையான விசாரணைக்கு பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பிரிவு 144 மற்றும் MCC அமல்: இன்று வாக்கு எண்ணிக்கை நாளில் பிரிவு 144 மற்றும் எம்சிசி அமல் படுத்தப்பட்டுள்ளது, இதன் கீழ் எந்தவிதமான மீறலும் தடைசெய்யப்படும். இது தவிர, டிஇஓ அனுமதியின்றி கொண்டாட்ட ஊர்வலம் அனுமதிக்கப்படாது, வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பு.

தால் ஏரிக்கரையில் வாக்கு எண்ணிக்கை: ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் தால் ஏரிக்கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) எண்ணப்படும். இந்தத் தொகுதியில் 16 சுயேச்சைகள் உட்பட அதிகபட்சமாக 24 வேட்பாளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் என்சியின் ரூஹுல்லா, அப்னி கட்சியின் மிர் மற்றும் பிடிபியின் இளைஞர் தலைவர் வாஹித் பர்ரா ஆகியோர் வலுவான வேட்பாளர்களாக உள்ளனர்.

மேலும் படிக்க | பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்...டாக்டர் சுபாஷ் சந்திரா பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News