ஹைதராபாத்: தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தின் அமீர்பேட்டை பகுதியில் மூத்த இஸ்ரோ (ISRO) விஞ்ஞானியை கொலை செய்யப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான எஸ். சுரேஷ் இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் சென்டருடன் தொடர்புடையவர். இஸ்ரோ மையத்தின் புகைப்பட பிரிவில் இவர் பணிபுரிந்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) அமீர்பேட்டை அன்னபூர்ணா குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் சுரேஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கூர்மையான ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் கொலை செய்யப்பட்டுள்ளே விஞ்ஞானி சுரேஷ் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தனது பிளாட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று அவர் அலுவலகத்திற்கு வராத நிலையில், அவருடன் பணிபுரிபவர்கள் அவரை மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதுக்குறித்து சென்னையில் இருக்கும் ஒரு வங்கியில் பணிபுரியும் எஸ்.சுரேஷின் மனைவிக்கு தெரியப்படுத்தினர். இந்த செய்தியைக் கேட்ட அவரின் மனைவி ஹைதராபாத் புறப்பட்டு வந்தார்.
இந்தநிலையில், எஸ்.சுரேஷின் சில உறவினர்களும் அதே குடியிருப்பில் வசிக்கின்றனர். எஸ்.சுரேசை தொடர்புக்கொள்ள முடியவில்லை என போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டின் கதவு திறந்து உள்ளே சென்றபோது, அங்கு எஸ்.சுரேஷின் உடல் இறந்த நிலையில் தரையில் கிடந்தது. அவரின் தலையில் அதிக அளவில் காயங்கள் உள்ளன. அவரின் தலையில் ஏதோ கனமான பொருள் கொண்டு தாக்கப்பட்டு எனக் கூறப்படுகிறது.
எஸ் சுரேஷ் தலையில் பலமான ஆயுதத்தால் தாக்கியதன் மூலம் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை சம்பவ இடத்திலிருந்து தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.