இந்தியாவின் மிக சக்திவாய்ந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் (GSAT-6A) இடம் இருந்து அனைத்து தொடர்புகளையும் இழந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உறுதிப்படுத்தியுள்ளது!
வின்னில் ஏவிய 48 மணி நேரத்திற்குள்ளாக இந்த தகவல்தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கான மொபைல் தகவல்தொடர்பு சேவைகளை பலபடி மேம்படுத்தப் பட்டதாக மாற்றுவதற்காக கடந்து மார்ச் 29-ஆம் நாள் இந்த செயற்கைகோள் வின்னில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது சுற்றுப்பாதையில் பயணிக்கும் போது GSAT-6A ஆனது சில கோளாறுகளை சந்தித்ததாக ISRO அறிவித்தது. இந்நிலையில் ஏப்ரல் 1, 2018 நாளிற்கான திட்டமிடப்பட்ட அட்டவணையின் படி செயற்கைகோள் செயல்படவில்லை எனவும், GSAT-6A உடனான தொடர்பு துண்டிக்கப் பட்டு விட்டதாகவும் ISRO அறிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் கடந்த மார்ச் 29 அன்று மாலை 4.56 மணியலவில் அதிநவீன GSAT-6A விண்ணின் செலுத்தப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் ஆனது., 2,140 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது!