நிலவின் தென் துருவத்தில் மனித காலனிகளை உருவாக்கலாம்: இஸ்ரோ தலைவர்

நிலவின் தென் துருவமானது மனித காலனிகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 24, 2023, 02:44 PM IST
  • சந்திரயான்-3 விண்கலம் நேற்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
  • விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.
  • நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
நிலவின் தென் துருவத்தில்  மனித காலனிகளை உருவாக்கலாம்: இஸ்ரோ தலைவர்  title=

பெங்களூரு (கர்நாடகா): ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கி சாதித்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் எஸ்.சோமநாத் இது குறித்து கூறுகையில், நிலவின் தென் துருவத்தில் மனித காலனிகளை உருவாக்கும் திறன் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புவதால், நிலவில் தரையிறங்க தென் துருவத்தை இஸ்ரோ தேர்வு செய்ததாக கூறினார். கிட்டத்தட்ட 70 டிகிரி தென் துருவத்தை நெருங்கிவிட்டோம். சூரியனால் வெளிச்சம் குறைவாக இருப்பதால் தென் துருவத்திற்கு ஒரு குறிப்பிட்ட நன்மை உள்ளது. அதிக அறிவியல் வாய்ப்புகள் இருப்பதால் இதற்கான சாத்தியம் உள்ளது" என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் மேற்கோள் காட்டினார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரோ தலைவர் மேலும் கூறுகையில், "நிலவு தொடர்பான அராய்ச்சியில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தென் துருவத்தில் அதிக ஆர்வம் காட்டினர், ஏனெனில் இறுதியில் மனிதர்கள் அங்கு சென்று காலனிகளை உருவாக்கி அதற்கு அப்பாலும் பயணிக்க விரும்புகிறார்கள். எனவே நாம் தேடும் சிறந்த இடம் ஒன்று தென் துருவத்தில் உள்ளது. அப்படி இருக்க மனிதர்கள் நிலவுக்கு சென்று தங்குவது சாத்தியமே..." என்றார்

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்காவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விக்ரம் லேண்டர் மெதுவாக தரையிறங்குவதைக் கண்டார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது அனைத்து இந்தியரும் பெருமிதம் அடையும் ஒரு நிகழ்வாகும்.

மேலும் படிக்க | நிலவின் முதல் புகைப்படம்... ஆரம்பிக்கலாமா நிலவில் இருந்து கேட்கும் விக்ரம்

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. அரிய சாதனையை நிகழ்த்தியதன் மூலம் அமெரிக்கா, சீனா மற்றும் பழைய சோவியத் யூனியன் வரிசையில் இந்தியாவும் இணைந்தது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

சந்திரயான் பயணம் 

இஸ்ரோவின் நிலவு பயணத்திட்டமாக சந்திரயான் தொடங்கப்பட்டது. சந்திரயான் -1 திட்டம் அதன் இலக்கை அடைந்து வெற்றிக்கண்டது. அதன்மூலம், நிலவில் நீருக்கான சாத்தியக்கூறுகள் உறுதிசெய்யப்பட்டன. மேலும், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அது பெரும் பங்கை ஆற்றியது. 2008-2009 ஆகிய ஆண்டுகளில் சந்திரயான்-1 விண்கலம் செயல்பட்டது. 

தொடர்ந்து, சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவது நோக்கமாக கொண்டு 2019இல் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், தரையிறக்கம் சரியாக இல்லாமல், அத்திட்டம் அதன் இலக்கை நிறைவு செய்யவில்லை. இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி பயணத்தில் இது சற்று பின்னடைவு ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்த நான்கே ஆண்டுகளில் அதில் இருந்து பெரும் பாடத்தை கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  சந்திராயன் 3! இந்தியர்களின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்... பாராட்டிய பிரதமர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News