நாடு முழுவதும் சமீபகாலங்களில் தக்காளி விலை திடீர் ஏற்றத்தின் காரணத்தால் தக்காளி வாங்குவது கடினமாக உள்ளது.
ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்துக்கு இதுவரை தெளிவான விவரங்கள் தெரியவில்லை. ஆனால், உற்பத்தி பாதிப்புதான் இதற்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே இந்தூர் மார்கெட்டில் தக்காளி திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறப்பாக மும்பை தாஹிஸார் மார்கெட்டில் 300 கிலோ தக்காளி திருடப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அம்மாநில போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் உள்ள காய்கறி அங்காடிகளில் தக்காளியை பாதுகாக்க பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தக்காளி விலையேற்றம் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விளைச்சல் கூடினால் வருகிற மாதங்களில் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.