இந்தியா, வங்காளதேச 346 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்

கடந்த ஆண்டு இந்தியாவுடன் வங்கதேசம் செய்துக்கொண்ட ஒப்பந்த அடி, இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடியும் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2018, 08:59 PM IST
இந்தியா, வங்காளதேச 346 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் title=

கடந்த ஆண்டு இந்தியாவுடன் வங்கதேசம் செய்துக்கொண்ட ஒப்பந்த அடி, இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு குழாய் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடியும் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.

இந்த குழாய் மூலம் இந்தியாவில் இருந்து வங்காளதேசத்திற்கு டீசல், மற்றும் இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லப்படும். முதலில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் இருந்து வங்காளதேசத்தின் தினஜ்பூர் மாவட்டம் வரை என 130கிலோ மீட்டர் வரை குழாய் அமைக்கப்படுகிறது. இந்த குழாய் வழியாக டீசல் கொண்டு செல்லப்படும். இதற்காக 346 கோடி செலவில், 30 மாதத்துக்குள் முடிக்கப்படும். இரண்டாவது குழாய் மேற்கு வங்காள மாநிலம் தாத்தபுலியா பகுதியில் இருந்து வங்காளதேசத்தின் குல்னா பகுதி வரை அமைக்கப்படுகிறது. இரண்டாவது குழாய் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும்.

இதுக்குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், பிரதமர் மோடியின் இந்த முயற்சி உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விவரித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் மூலம் வங்களாதேஷ் பொருளாதாரம் வலுப்படும எனக் கூறினார். 

எரிபொருள் குழாய் திட்டம் மட்டுமில்லாமல், இருநாடுகளுக்கிடையே ரயில் சேவையும் திறந்து வைத்தனர். 

Trending News