இந்திய கடற்படையினர் மீட்பு நடவடிக்கை தற்போது லட்சத்தீவை நோக்கி சென்றுள்ளது.
ஒக்கி புயல் தாக்கியபோது கன்னியாகுமரி மற்றும் கேரளா உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் புயலில் சிக்கி மாயமானதாக அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ஒக்கி புயலில் சிக்கி மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என முதல்வர்தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழையானது மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டதை அடுத்து கடந்த 5 நாட்களாக கடுமையாக புயல் சூழ்ந்து வருகிறது. ஒகி புயல் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு நெறிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
கடற்படை மற்றும் கடலோரக் காவர் படையினர் பாதிக்கபட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒகி புயலால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கடற்படை மற்றும் கடலோரக் காவலர்கள் மூலம் ஒகி புயலிலிருந்து இதுவரை 400 பேர் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதை தொடர்ந்து தற்போது லட்சத்தீவில் அவர்களின் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Indian Navy's search and rescue operation continues in Lakshadweep. #CycloneOckhi pic.twitter.com/Di4yyjrQVI
— ANI (@ANI) December 4, 2017