Rafale போர் விமானத்தின் இரவு நேர பயிற்சி... எல்லையில் தீவிர எச்சரிக்கை நிலை..!!!

இந்தியாவிற்கு வந்த ஐந்து விமானங்களும் ஹிமாசலபிரதேசத்தின் மலைப்பகுதியில், இரவு நேர நடவடிக்கைகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2020, 01:49 PM IST
  • கால்வான் பகுதியில் பதற்றம் அதிகமாக இருந்த ஜூலை முதல் வாரத்துடன் ஒப்பிடும்போது லடாக் பகுதியில் சீன படையின் ரஃபேல் விமானத்தில் எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத வகையில் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளது
  • நடவடிக்கைகள் குறைந்துள்ளன
  • திபெத்தில் உள்ள லாசா கோங்கர் விமான தளத்தையும், சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஹோடன் விமான தளத்தையும் துருப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன
Rafale போர் விமானத்தின் இரவு நேர பயிற்சி... எல்லையில் தீவிர எச்சரிக்கை நிலை..!!! title=

கடந்த மாதம், அதாவது ஜூன் மாதம் 29ம் தேதி இந்தியாவிற்கு, ரஃபேல் விமானத்தின் முதல் தொகுதி வந்தடைந்தது. இந்த விமானங்கள் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் வந்திரங்கின.

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடையே 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

தற்போது இந்த விமானங்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 

இந்தியாவிற்கு வந்த ஐந்து விமானங்களும் ஹிமாசலபிரதேசத்தின் மலைப்பகுதியில், இரவு நேர நடவடிக்கைகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

ALSO READ | குளிரில் உறையப்போகும் லடாக்.. இனியாவது எல்லையில் தொல்லைகள் தீருமா..!!

லடாக் பகுதியில், 1597 கிமீ நீள  இந்திய சீன எல்லையில், நிலைமை மோசமானால் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருகிறது ரஃபேல்.

இந்தியா ஃப்ரான்ஸ் நிறுவனமான   Dassault Aviation நிறுவனத்திடம் இருந்து, 36 விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளது.

ரஃபேல் விமானத்தில் எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத வகையில் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளதால் இது ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் என கூறப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் துருப்புக்களை முற்றிலுமாக வெளியேற்றுவதற்காக இந்தியா-சீனா இடையில் ராஜீய நிலையிலும், ராணுவ நிலையில் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் போதிலும், , மூன்று படைகளும் எல்.ஐ.சியில் உள்ள அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகின்றன. கடந்த வாரம், இராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே, ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் எந்த விதமான தீடீர் தாக்குதல்களுக்கு இடம் கொடுக்காமல் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். 

ALSO READ | இந்தியா வந்தடைந்தது ரஃபேல் விமானம்: தேசிய பாதுகாப்பு என பிரதமர் பெருமிதம்…!!!

கால்வான் பகுதியில் பதற்றம் அதிகமாக இருந்த ஜூலை முதல் வாரத்துடன் ஒப்பிடும்போது லடாக் பகுதியில் சீன படையின் நடவடிக்கைகள் குறைந்துவிட்டாலும், இந்திய விமானப்படை , சீனாவின் துரோக மனப்பான்மையை கருத்தில் கொண்டு, எந்த விதமான வாய்ப்பையும் கொடுக்க விரும்பவில்லை என்பதால்,  எல்லையில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

குறிப்பாக திபெத்தில் உள்ள லாசா கோங்கர் விமான தளத்தையும், சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஹோடன் விமான தளத்தையும் துருப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

Trending News