Heatwave Warning எட்டு மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை.. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

Heatwave Alert: கடுமையான வெப்ப அலை.. எட்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. இந்த மாநிலத்தில் வெப்ப அலை பேரழிவை ஏற்படுத்தும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 24, 2024, 02:59 PM IST
Heatwave Warning எட்டு மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை.. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை title=

Heatwave, India Meteorological Department (IMD): மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) கணித்துள்ளது. வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி வரை உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. புயல் எதிர்ப்பு சுழற்சி காரணமாக தானே, ராய்காட் மற்றும் மும்பையின் சில பகுதிகள் ஏப்ரல் 27 முதல் 29 வரை வெப்ப அலை எச்சரிக்கையில் விடுக்கப்பட்டுள்ளதாக ஐஎம்டி (IMD) விஞ்ஞானி சுஷ்மா நாயர் தெரிவித்துள்ளார்.

வெப்ப அலை என்றால் என்ன?

வெப்ப அலை என்பது இயல்பு வெப்ப நிலையை விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு தொடர்ச்சியாக மூன்று தினங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதை குறிக்கும். மேலும் உலக வானிலை ஆய்வு அமைப்பானது தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படும் என வரையறை செய்துள்ளது.

தென் இந்தியா மாநிலங்களுக்கும் பரவிய வெப்ப அலை 

கிழக்கிந்தியாவின் பெரும் பகுதிகளைத் தாக்கிவரும் வெப்ப அலையானது, தற்போது நேற்று முதல் (ஏப்ரல் 23, செவ்வாய்கிழமை) தென் இந்தியா மாநிலங்களுக்கும் பரவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள்! இதை படிக்கவும்!

இயல்பை விட இரண்டு முதல் ஏழு டிகிரி செல்சியஸ் அதிகம்

ஒடிசா, கங்கை மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் ஏழு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

தமிழகத்தில் சேலம், ஈரோட்டில் வெப்பநிலை உயர்வு

அனந்தபூரில் 43.5 டிகிரி செல்சியஸ், ஆந்திராவில் கர்னூலில் 43.2 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 42.3 டிகிரி செல்சியஸ், தமிழகத்தில் ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது.

அடுத்த ஐந்து நாட்கள் கடுமையான வெப்ப அலை

அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, பீகார், சிக்கிம், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை ஏற்படலாம் என எதிர் பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - அதிகபட்ச வெப்பத்தை அனுபவிக்கும் நாட்டின் மிகவும் வெப்பமான நகரங்கள்

அதிக ஈரப்பதம் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்

அதேநேரத்தில் கடலோர ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கோவா, கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அதிக ஈரப்பதம் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளது.

வெப்ப அலை அலர்ட்.. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் வெப்ப அலை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும் எனவும் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க - மொபைல் சீக்கிரமே சூடாகுதா? தடுக்க சில வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News