Drone Attack: அதிகரித்து வரும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் நிறுவக்கூடிய ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு முறைகளை வாங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள நாட்டின் தனியார் நிறுவனமான கிரீன் ரோபாட்டிக்ஸ் (Grene Robotics), இந்தர்ஜால் (Inderjaal) என்ற பெயரில் உள்நாட்டு தன்னாட்சி ட்ரோன் பாதுகாப்பு டோம் அமைப்பை ((Autonomous Drone Defence Dome) உருவாக்குவதாகக் கூறியுள்ளது. 1000-2000 கி.மீ சுற்றளவில் வரும் ட்ரோன்களை (Drone) அல்லது தாழ்வாக பறக்கும் அனைத்தியும் வீழ்த்துவதில் இந்திரஜால் வெற்றிகரமாக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலைதூரத்திலிருந்தே ட்ரோன்களை அழிக்க முடியும்
கிரென் ரோபாட்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் கோபி ரெட்டி, இது குறித்து மேலும் கூறுகையில், “இலக்கை நெருங்கும் எந்த ட்ரோன்களையும் இந்திரஜால் தொலை தூரத்திலிருந்தே அழிக்க முடியும். இந்திரஜால் ஒரு மொபைல் அமைப்பு, தேவைக்கு ஏற்ப ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்” என்றார்.
ALSO READ | Swiggy: இனி டெலிவரி பாய் அல்ல; ட்ரோன்கள் உங்கள் வீட்டு கதவை தட்டலாம்..!!
ட்ரோன்களின் ஆபத்துக்களைச் சமாளிக்க, DRDO உதவியைப் பெறுவதோடு, வெளிநாட்டிலிருந்தும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அரசாங்கம் வாங்கலாம்.
இந்திய பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்
இதுவரை பிடிபட்ட பாகிஸ்தான் ட்ரோன்களில் பெரும்பாலானவை சீனா தயாரித்த ட்ரோன்களாகும், அவை 4-5 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியவை என்பதோடு, ஐந்து கிலோமீட்டர் வரை செல்லக்கூடியவை. இந்த ட்ரோன்கள் ஆயுதங்களையும் குண்டுகளையும் தாக்கி செல்ல முடியும் என்பதால், படைகள் மீது தாக்குதல் நடத்தும் சாத்தியமும் உள்ளது. இதுபோன்ற ட்ரோன்களின் உதவியுடன், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு படையினரையும் பாகிஸ்தான் குண்டுகளால் தாக்க முடியும் என பாதுகாப்பு நிறுவனங்களின் அறிக்கைகள் கூறுகின்றன.
ஐ.எஸ்.ஐ.யின் ஆபரேஷன் பரிந்தா
கடந்த சில நாட்களில், ஜாம்முவில் ராடார் 7 முறை ட்ரோன்களை கண்டறிந்துள்ளது. எல்லையைத் தாண்டி அனுப்பப்படும் ட்ரோன்களுக்கு ஆபரேஷன் பரிந்தா என்று பாகிஸ்தான் ராணுவம் பெயரிட்டுள்ளது எனவும் இது மிகப் பெரிய அச்சுறுத்தலைக் குறிக்கிறது எனவும் பாதுகாப்பு அமைப்புகளின் கூறுகின்றன.
ALSO READ | நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த தகவல் வெளியானது
ஊடுருவ சதி
ஜம்மு-காஷ்மீரில் தற்போதுள்ள பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு கடுமையான ஆயுத பற்றாக்குறை உள்ளது. அதனால், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கவும், பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு மூலம் ஏராளமான பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யவும் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய இராணுவத்தின் கடுமையான கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக, பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை.
இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகின்றன
ட்ரோன்களில் நிறுவப்பட்டுள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மூலம் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்த கேமராக்கள் மூலம், பாகிஸ்தான் இராணுவம் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் எந்த வழியாக ஊடுருவுவது எளிது என்பதைக் கண்டறிந்து, அதன் பின்னர், அந்த வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | நாட்டில் தடுப்பூசி போடப்படும் வேகம் மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR