"இந்தியா சொர்க்க பூமி”: இந்தியாவிற்கு அகதியாக வந்துள்ள ஆப்கான் பெண்மணி

ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில் அங்கு நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 22, 2021, 09:00 PM IST
"இந்தியா சொர்க்க பூமி”: இந்தியாவிற்கு அகதியாக வந்துள்ள ஆப்கான் பெண்மணி title=

ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில் அங்கு நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானை தாலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், பயங்கரவாத அமைப்பான தாலிபான் வசம் ஆப்கான் சென்றுள்ளது உலகிற்கே ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. ஆப்கனில் பல்வேறு நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் நேற்று முன்தினம் இரவு சென்ற நிலையில், இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி, இன்று காலை, விமான படை விமான மூலம், அழைத்து வரப்பட்டனர். 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூலில் இருந்து இந்தியாவில் உள்ள காசியாபாத் ஹிண்டன் விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் இந்தியர்கள் உடன் அந்நட்டைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். இதில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். 
இந்தியா வந்தடைந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களில் சதியா என்ற பெண்மணியும் அவரது குடும்பத்தினரும் அடங்குவர்.

ALSO READ | தாலிபான் ஆட்சிக்கு முன்னும் பின்னும்: பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்..!!!

விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தலிபான் (Taliban)  பயங்கரவாதிகளுடன் தனக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவத்தைசெய்தியாளர்களிடம் விவரித்தார். தாலிபான்கள் அவர்களை சில மணி நேரம் சிறை பிடித்து வைத்ததாக கூறிய அவர், பயங்கரவாதிகள் அவரது வீட்டை எரித்து விட்டதாகவும் கூறினார்.

ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்

"ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது, அதனால் நான் என் மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் இந்தியா வந்தேன்.  தலிபான்கள் என் வீட்டை எரித்தனர். ஆப்கானிஸ்தானில்  பெண்கள் பாதுகாப்பாக இல்லை. எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு மிக்க நன்றி. இந்தியா உண்மையில் சொர்க்க பூமி தான் "என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News