மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி இறப்பு.. எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை சம்பவம் காரணமாக இதுவரை 30 பேர் இறந்துள்ளனர். மேலும் 250 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2020, 09:50 AM IST
மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி இறப்பு.. எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. title=

09:46 27-02-2020
வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை சம்பவம் காரணமாக காலை 30 பேர் இறந்துள்ளனர் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.


புது டெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் நேற்று வரை 27 பேர் பலியாகி இருந்தனர். தற்போது மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. காயமடைந்தவர்களில் அதிகபட்சமாக 200 பேர் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் இங்கு 25 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். ஜிடிபி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் சுனில் குமார் இறந்தவர்களை குறித்து உறுதிப்படுத்தினார். இறந்தவர்களில் ஒரு பெண் அடங்குவார். அதேபோல எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் 2 பெரி இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

செவ்வாயன்று, 13 பேர் காயமடைந்துள்ளனர் என ஜிடிபி மருத்துவமனை உறுதி செய்தது. ஆனால் அடுத்த நாள் (புதன்கிழமை) 12 பேர் இறந்ததாக அறிவித்தது. அல் ஹிந்த் மருத்துவமனையில் இருந்து நான்கு இறந்த உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜி.டி.பி மருத்துவமனையில் 25 பேர் எப்படி இறந்தார்கள் என்ற தகவலையும் அளித்துள்ளது. அதாவது பலியானவர்களில் துப்பாக்கி சூடு மூலம் அதிகமாக இறந்துள்ளதாக கூறியுள்ளது. துப்பாக்கி சூடு மூலம் 10 பேர், 7 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு, 3 பேர் கத்தி குத்து மற்றும் இரண்டு இறப்புகள் தீ வைக்கப்பட்டதன் மூலம் இறந்துள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.

மறுபுறம், எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் கூற்றுப்படி, இதுவரை மொத்தம் 48 நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேர் இறந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு மூலம் இருவரும் இறந்துள்ளனர். காயமடைந்த 10 நோயாளிகள் பட்பர்கஞ்சில் உள்ள மேக்ஸ் (MAX) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஏழு பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மருத்துவமனையில் டி.சி.பி அமித் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மேம்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Trending News