Go First நிறுவனத்திற்கான திவால் தீர்வு அதிகாரியை நியமித்தது தீர்ப்பாயம்!

கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்தின், திவால் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், அந்நிறுவனத்திற்கு இடைக்கால நிவாரணமாக திவால் தீர்வு அதிகாரியை நியமித்து உள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 11, 2023, 12:38 AM IST
  • கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் தற்போதைய மேலாண்மை நிர்வாக குழு கலைக்கப்படுகிறது.
  • திவால் தீர்வு நடவடிக்கைக்கு மேலாண்மை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
  • கோ பர்ஸ்ட் நிறுவனம் எந்த ஒரு ஊழியரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது.
Go First நிறுவனத்திற்கான திவால் தீர்வு அதிகாரியை நியமித்தது தீர்ப்பாயம்! title=

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள கோ பர்ஸ்ட் கடந்த வாரம் திவால் தீர்வு நடவடிக்கைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) தாமாக முன்வந்து விண்ணப்பித்து இருந்தது. கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சுமார் 11,0003 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறது. மேலும், நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த 3ம் தேதி முதல் விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் திவால் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம்,  கோ பர்ஸ்ட் நிறுவனத்திற்கு நிவாரணம் அளிக்கும் விதமாக திவால் தீர்வு அதிகாரியை நியமித்து உள்ளது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) புதன்கிழமை அளித்த தீர்ப்பிற்குப் பிறகு, கோ பர்ஸ்ட் நிர்வாகம் தற்போது திவால் தீர்வு நடவடிக்கை அதிகாரியின் கட்டுப்பாட்டுக்கு செல்கிறது. அல்வாரெஸ் மற்றும் மார்சல் நிறுவனத்தின் அபிலாஷ் லால் என்பவரை திவால் தீர்வு அதிகாரியாக தீர்ப்பாயம் நியமித்து உள்ளது. தீர்வு அதிகாரியிடம் 5 கோடி ரூபாய் டெபாசிட் தொகை செலுத்தும்படி கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் படிக்க | Go First நிறுவனத்தை தொடர்ந்து சிக்கலில் SpiceJet... NCLT அனுப்பிய நோட்டீஸ்!

திவால் தீர்வு அதிகாரியை நியமிக்கப்பட்டதை அடுத்து, கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் தற்போதைய மேலாண்மை நிர்வாக குழு கலைக்கப்படுகிறது. மேலும், திவால் தீர்வு நடவடிக்கைக்கு மேலாண்மை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், கோ பர்ஸ்ட் நிறுவனம் எந்த ஒரு ஊழியரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தீர்வு அல்ல என்பதை உறுதி செய்யும் அதே வேளையில், Go Airlines நிறுவனம், அதன் சேவைகளை சீராக இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், IBCயின் 10வது பிரிவின் கீழ், Go First ஆனது  திவால் தீர்வு நடவடிக்கையை இறுதி செய்ய 330 நாட்கள் கால அவகாசம் கிடைக்கும். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கோ பர்ஸ்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி, அந்நிறுவனத்துக்கு ஏறத்தாழ 11,463 கோடி ரூபாய் கடன் இருப்பது தெரியவந்து உள்ளது. இதில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன், விமான குத்தகைதாரர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட அனைத்து வகையான நிலுவைகளும் அடங்கும்.

கடந்த வாரம், கோ ஃபர்ஸ்ட் மே 3 முதல் 5 வரை தனது அனைத்து விமானங்களையும் ரத்து செய்ததாக அறிவித்தது, அது தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு திவால் சட்டத்தின், 2016 இன் பிரிவு 10 இன் கீழ் விண்ணப்பத்தை தாக்கல் செய்தது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, GoFirst நிறுவனத்திடம் இருந்து 45 விமானங்களை திரும்பப் பெறுமாறு விமானத்தை வாடகைக்கு கொடுக்கும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இதற்காக, இந்த விமானங்களின் பதிவை ரத்து செய்யுமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (DGCA) கோரிக்கை விடுத்தன.

54 விமானங்கள் கொண்ட கோ பர்ஸ்ட் நிறுவனம்

கோ பர்ஸ்ட் நிறுவத்திற்கு கடன் வழங்கியவர் அல்லது விமான நிறுவனத்திற்கான விமானங்கள் சபளை செய்பவர்களாலும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதன் கடன்களை சொத்துக்களை மீட்டெடுப்பது தடைசெய்யப்படுவதாக என்சிஎல்டி தனது உத்தரவில் கூறியுள்ளது. மே 2 அன்று, GoFirst நிறுவனத்திடம் மொத்தம் 54 விமானங்கள் இருந்தன. இருப்பினும், இதில் 28 விமானங்கள் பி&டபிள்யூ நிறுவனத்தால் இன்ஜின்கள் வழங்கப்படாததால் தரையிறக்கப்பட்டன மற்றும் 26 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இதற்கிடையில், கோ பர்ஸ்ட் (Go First) நிறுவனம் திவால் தீர்வு நடவடிக்கைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்கள், விமான பார்க்கிங் இடங்கள் போன்ற சொத்துகளை கைப்பற்றுவதற்கு ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற முன்னணி ஏர்லைன் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | Go First நெருக்கடியால் எகிறும் கட்டணங்கள்! அதிர்ச்சியில் விமான பயணிகள்!

மேலும் படிக்க | 55 பயணிகளை ‘விட்டு’ சென்ற Go First விமானம்! ரூ.10 லட்சம் அபராதம் விதித்த DGCA

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News