காங்கிரஸில் இருந்து விலகுவேன்; ஆனால் பாஜகவில் சேர மாட்டேன்: கேப்டன் அமரீந்தர்

நான் பிஜேபி கட்சியில் சேரப்போவதில்லை. தற்போது வரை நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். விரைவில் விலகுவேன் -முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 30, 2021, 07:38 PM IST
  • காங்கிரஸ் கட்சியில் அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • நான் பிஜேபி கட்சியில் சேரப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
  • நம்பிக்கை இல்லாத இடத்தில் ஒருவரால் எப்படி தொடர முடியும்.
காங்கிரஸில் இருந்து விலகுவேன்; ஆனால் பாஜகவில் சேர மாட்டேன்: கேப்டன் அமரீந்தர் title=

புது டெல்லி: பஞ்சாபில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்து (Navjot Singh Sidhu) ராஜினாமா செய்த பிறகு, பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வரும் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை உருவாக்கியுள்ளது.

அதேவேளையில், முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது, பல ​​ஊகங்களை எழுப்பியுள்ளது. கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று (புதன்கிழமை) உள்துறை அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்தார். அதன் பிறகு இன்று (வியாழக்கிழமை) திடீரென தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ - NSA) அஜித் தோவலை சந்தித்தார்.

அவர் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த விதம் மற்றும் காங்கிரஸ் மீது காட்டிய அதிருப்தியை வைத்து பார்க்கும், அவர் பாஜகவில் சேருவார் என்று ஊகங்கள் இருந்தன. ஆனால் அவர் அதைத்தொடர்ந்து மறுத்து வந்தார். அவர் டெல்லிக்கு வந்த பிறகும், அவர் ஊடகங்களுடனான சந்திப்பில் கூட, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேச மறுத்து வந்தார். 

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை (Amit Shah) சந்தித்த பிறகும், ஊடகங்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் பிரச்சனை பற்றி பேச டெல்லி வந்ததாகக் கூறினார். 

ALSO READ | Breaking News: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து

பாஜகவில் சேர மாட்டேன்:
இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசும் போது, நான் பிஜேபி கட்சியில் சேரப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். தற்போது வரை நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். ஆனால் என்னை அவமானப்படுதத்துவதை தாங்கிக்கொள்ள முடியாது. நம்பிக்கை இல்லாத இடத்தில் ஒருவரால் எப்படி தொடர முடியும். காங்கிரஸில் இருந்து விரைவில் விலகுவேன். எனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சிக்கு தெளிவுபடுத்தியுள்ளேன் என்றார்.

அமித் ஷாவை எதற்கு சந்தித்தேன்:
தனது ட்விட்டரில், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். அப்பொழுது வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாய அமைப்புக்கள் போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது மற்றும் அந்த சட்டங்களை ரத்து செய்வதன் மூலமும், பஞ்சாபில் பயிர் பல்வகைப்படுத்தலை ஆதரிப்பதன் மூலமும் இந்த நெருக்கடியை உடனடியாக தீர்க்கலாம் என வலியுறுத்தினேன்" எனக் கூறியுள்ளார்.

ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவலுடனான சந்திப்பு குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ளன. அதாவது அவர் பாஜகவில் சேரலாம். அங்கு அவருக்கு ஒரு பெரிய பதவியை (வேளாண் அமைச்சர்) கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

ALSO READ | நான் அவமானமாக உணர்கிறேன்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் சோகம்

காங்கிரஸ் கட்சியில் குழப்பம்:
காங்கிரஸ் தலைவர்களின் ஈகோ காரணமாக வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் கட்சி தோல்வியை சந்திக்க நேரிடலாம் எனத் தெரிகிறது. தற்போது, ​​அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் இந்த அரசியல் குழப்பம் ஒரு முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News