காங்கிரஸ் தலைவர் தேர்தல் : ஓட்டு போடுவாரா ராகுல் காந்தி ? - மூத்த தலைவர் பதில்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், ராகுல் காந்தி வாக்கு செலுத்தவது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 16, 2022, 08:11 PM IST
  • காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
  • வாக்கு எண்ணிக்கை அக். 19ஆம் தேதி நடைபெறுகிறது.
  • சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் : ஓட்டு போடுவாரா ராகுல் காந்தி ? - மூத்த தலைவர் பதில் title=

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக். 17) காலை தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை கடந்த செப். 22ஆம் தேதியும், வேட்பு மனு தாக்கல் செப். 24ஆம் தேதியும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை வரும் அக். 19ஆம் தேதி நடைபெறுகிறது. 

தலைவர் பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். நீண்ட ஆண்டுகள் கழித்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் அல்லாதவர்கள் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அந்த வகையில், தற்போது பய "பாரத் ஜோடா யாத்ரா" என்ற இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு, கேரளாவை அடுத்து தற்போது அவர் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

மேலும் படிக்க | ரேஷன் அரிசி விவகாரம்: 'அண்ணாமலை பேச்சைக்கேட்கும் ஒன்றிய அமைச்சர்' - சக்கரபாணி பதில்!

இதனால், அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பாரா அல்லது வாக்களித்தால் எங்கு தனது வாக்கைச் செலுத்துவார் என்ற கேள்வியும் பரவலாக எழுந்தது. இந்நிலையில், அதற்கான விடையை அக்கட்சியின் பொதுச்செயலாளரான (பொறுப்பு) ஜெய்ராம் ராமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

 

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,"ராகுல் காந்தி நாளைய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பாரா போன்ற கேள்விகள் எனது கவனத்திற்கு வந்தன. எந்த அனுமானங்களும் வேண்டாம். அவர் யாத்திரையின் போது, பல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனக்கல்லு என்ற இடத்தில், 40 சக காங்கிரஸ்காரர்களுடன் வாக்களிக்க உள்ளார்" என குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, யாத்திரையின் போது பொதுமக்கள் சிலருக்கு மின்சாரம் தாக்கியவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ.,  தூரத்தை 150 நாள்களில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். 12 மாநிலங்களில் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா அடுத்து கடந்த செப். 30ஆம் தேதி அன்று கர்நாடகா வந்தடைந்தார். கர்நாடகாவில் 21 நாள்கள் அங்கு நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்து வட மாநிலங்கள் நோக்கி பயணிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இந்திய ஒற்றுமை யாத்திரை : தாய்க்கு ஷூ லேஸ் கட்டி விட்ட ராகுல் காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News