ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர்.
மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.
அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை அமைகிறது. இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகை வட இந்தியாவின் ஒரு பகுதியான உத்தரபிரதேசத்தின் விருந்தாவன் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
உத்தரபிரதே மக்கள் தங்களது நண்பர்களின் முகங்களில் கலர் பூசியும், கட்டி அணைத்தும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
#WATCH Widows celebrating Holi with colours & flowers in Vrindavan #UttarPradesh pic.twitter.com/xBFlYYhtzR
— ANI UP (@ANINewsUP) February 28, 2018
Widows celebrated Holi with colours & flowers in Vrindavan; said 'playing Holi has brought new colours into our life' #UttarPradesh pic.twitter.com/KobPSFev9B
— ANI UP (@ANINewsUP) February 28, 2018