தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கேரளாவில் மிக கனமழை பெய்யக் கூடும் மேலும் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் கவனமாக இருக்கும்படி என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
லட்சத்தீவு அருகே உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு, 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் மேற்கு நோக்கி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு மலப்புரம், கன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் இதனால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13 முதல் அனைத்து இடங்களுக்கும் உஷார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.