வேளாண் சட்டத்தை ஆதரித்து ஹரியானா விவசாயிகள் வேளாண் அமைச்சரிடம் கடிதம்

ஹரியானாவின் விவசாயிகள் தூதுக்குழு, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை டெல்லியில் சந்தித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2020, 09:33 PM IST
  • ஹரியானாவின் விவசாயிகள் தூதுக்குழு, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை டெல்லியில் சந்தித்துள்ளது.
  • மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய அரசின் கதவுகள் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
வேளாண் சட்டத்தை ஆதரித்து ஹரியானா விவசாயிகள் வேளாண் அமைச்சரிடம் கடிதம் title=

அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை  ரத்து செய்யக் கோரி  உத்தரபிரதேசம், பஞ்சாப் (punjab), ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 17வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் கடந்த 27ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை (Delhi) ஒட்டியுள்ள பிற மாநிலப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஹரியானா, விவசாயிகள் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பண்ணை சட்டங்களை ஆதரித்துள்ளனர்.  இருப்பினும் விவசாயிகள் ஏபிஎம்சி (APMC) மற்றும் எம்எஸ்பி (MSP) முறையை தொடர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஹரியானாவின் (Haryana) விவசாயிகள் தூதுக்குழு, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை டெல்லியில் சந்தித்துள்ளது. இந்த விவசாயிகள் புதிய விவசாய சட்டங்களை (Farm Laws 2020)  ரத்து செய்ய வேண்டாம் என்று வேளாண் அமைச்சரிடம் கோரியுள்ளனர்.

விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை வேளாண் அமைச்சரிடம் ஆதரித்து, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)  மற்றும் மண்டி முறை  (APMC) தொடர வேண்டும் என்று கோரியுள்ளனர். சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றாலும், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்பதால் ரத்து செய்யக்கூடாது என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goel), இந்திய அரசின் கதவுகள் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறியுள்ளார். இந்த விவசாய போராட்டம் மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் சக்திகளிடமிருந்து விடுவிக்கப்பட்டால், விவசாயிகளின் இந்த சட்டம் அவர்களுக்கும் நாட்டிற்கும் நலன் பயக்கும் என்பதை நமது வேளாண் சகோதர சகோதரிகள் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள்.   உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேச விரும்பும் வேளாண் தலைவர்கள் இந்த நக்சலைட்டுகளால் மிரட்டப்படுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ALSO READ |Good News: 8 மாதங்களில் 60 கோடி கொரோனா தடுப்பூசி வழங்க தயாராகிறது இந்தியா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News