கேரள மாநிலம் குருவாயூர் உள்ள கிருஷ்ணன் கோவில் நேற்று மாலை சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அங்கு யானை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. யானையுடன் பாகனாகவனுன் கூட இருந்தார்.
அப்போது திடீரென யானைக்கு மதம் பிடித்து பிளிறி அங்குமிங்கும் ஓடியது. அதிர்ச்சியடைந்த பக்கதர்கள் நாலாபுறம் ஓடினர். மதம் பிடித்த யானையை சமாதானப்படுத்த பாகன் முயன்றார்.
அப்போது ஆவேசமடைந்த அந்த யானை தந்தத்தால் பாகனின் நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியது. இதில் பாகன் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் விழுந்தார்.
அடிபட்ட பாகனை பக்தர்கள் மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாகன் பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே கால்நடை டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டார். மயக்க ஊசி செலுத்தப்பட்டடு யானையை சமாதானப்படுத்தினர்.