2019 முதல் 2024 வரை நீதிமன்றத்தை நடத்துவது போல் நடித்து, போலியான சட்ட ஆவணங்களைத் தயாரித்த ஒரு நபர் மீது அகமதாபாத்தில் உள்ள காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. குஜராத்தில் போலி அரசு அலுவலகங்கள், போலி சுங்கச்சாவடிகள், போலி அதிகாரிகள் மற்றும் போலி மருத்துவமனைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்போது போலியான நீதிமன்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காந்திநகரில் வசிக்கும் 37 வயதான மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற நபர், கிரிமினல் நம்பிக்கை மீறல், ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல், அரசு ஊழியர்களுக்கு தவறான தகவல் அளித்தல் போன்ற மோசமான செயல்களைச் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தின் சிவில் நீதிமன்ற நீதிபதி ஹர்திக் தேசாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் அகமதாபாத்தில் உள்ள கரஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜே எல் சோவாடியா கூறியதை அடுத்து தான், நான் புகார் அளித்தேன் என்று ஹர்திக் தேசாய் கூறியுள்ளார். பால்டி என்ற பகுதியில் தனக்கு சொந்தமாக சில அரசு நிலம் இருப்பதாக கூறி பாப்ஜூஜி தாக்கூர் என்ற நபர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த போலியான நீதிமன்றம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. பாப்ஜூஜி தாக்கூர் சில அரசு நிலம் தனக்குச் சொந்தமானது என்று அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் காட்டியுள்ளார்.
Fake School!
Fake Government Office!
Fake Toll Booths !
Fake Currency Notes!NOW
Fake Court !
What a mod
Its a #GujaratModel pic.twitter.com/SlZldY6QcE
— கார்த்திகேயன் | Karthikeyan (@I_KKarthikeyan) October 22, 2024
ஆனால் பிறகு விசாரணையில் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற ஒருவர் தாகூரை ஏமாற்றி நீதிபதி போல நடித்தது தெரியவந்துள்ளது. மோரிஸ் நீதியாக நடித்து 2019ம் ஆண்டு தாக்கூருக்கு சில அரசு நிலத்தை போலியான பத்திரம் மூலம் பதிவு செய்து கொடுத்துள்ளார். மேலும் விசாரணையில், மோரிஸ் ஒரு நீதிபதியைப் போல நடித்து மக்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்க உதவும் நபராக பிரபலமடைந்துள்ளார் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மக்களை ஏமாற்றுவதற்காக பல பொய்களை கூறி, காந்திநகர் என்ற இடத்தில் ஒரு போலி நீதிமன்றத்தை அமைத்துள்ளார். கிட்டத்தட்ட உண்மையான நீதிமன்றத்தை போலவே அதனை உருவாக்கி உள்ளார்.
ஒரு மனிதன் தன்னை நீதிபதியாகக் காட்டி, உதவியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஒரு போலி நீதிமன்றத்தை உருவாக்கி உள்ளார், அவர் வழக்குகளை உருவாக்கி அதற்கு தீர்ப்புகளையும் வழங்கி உள்ளார் என்று எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான பண மதிப்புள்ள அரசு நிலத்தை மக்கள் உரிமை கோருவதற்கு உதவ முயன்றுள்ளார். இது போன்ற பல பொய்களை மக்களுக்கு கூறி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 5 ஆண்டுகளாக எப்படி போலி நீதிமன்றம் நடத்தப்பட்டது என்று போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர். குஜராத்தில் கடந்த ஆண்டு 6 போலி அரசு அலுவலகங்கள் அரசின் பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மோர்பி மாவட்டத்தில் போலி சுங்கச்சாவடி நடத்தி மக்களிடம் பணம் பறித்த கும்பலும் பிடிபட்டது.
மேலும் படிக்க - CRPF பள்ளி அருகே... பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்... டெல்லியில் பரபரப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ