குஜராத் தேர்தல் 2017: மணக்கோலத்தில் வாக்களித்த திருமண ஜோடி!

திருமண ஜோடி ஒன்று, தங்கள் திருமண விழாவிற்கு முன் தேர்தல் தான் முக்கியம் என ஜோடியாக வாக்களிக்க வந்தனர்!

Last Updated : Dec 9, 2017, 10:41 AM IST
குஜராத் தேர்தல் 2017: மணக்கோலத்தில் வாக்களித்த திருமண ஜோடி! title=

குஜராத் மாநிலம் பாரூக்கின் பஹுமலி பகுதியில் திருமண ஜோடி ஒன்று, தங்கள் திருமண விழாவிற்கு முன் தேர்தல் தான் முக்கியம் என ஜோடியாக வாக்களிக்க வந்த சம்பவம் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது!

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று (டிசம்பர் 9-ம்) மற்றும் 14-ம் தேதி என 2 கட்டமாக நடைபெற உள்ளது.

பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றன. 

நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் முதற்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குபதிவு காலை 8 மணி முதல் துவங்கியது, மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து செல்கின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடைப்பெறும் குஜராத் மாநிலம் பாரூக்கின் பஹுமலி பகுதியில் திருமண ஜோடி ஒன்று, தங்கள் திருமண விழாவிற்கு முன் தேர்தல் தான் முக்கியம் என ஜோடியாக வாக்களிக்க வந்தனர்!

Trending News