ரபேல் ஒப்பந்தம் ஆவணங்கள் ஏங்கே?., உச்சநீதிமன்றம் கேள்வி!

ரபேல் ஒப்பந்தம் வழக்கில் பெரும் திருப்பு முனையாக ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Mar 6, 2019, 05:10 PM IST
ரபேல் ஒப்பந்தம் ஆவணங்கள் ஏங்கே?., உச்சநீதிமன்றம் கேள்வி! title=

ரபேல் ஒப்பந்தம் வழக்கில் பெரும் திருப்பு முனையாக ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரான்ஸில் உள்ள ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். 

இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரம் குறித்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்ட அட்டர்னி ஜெனரல் அந்த ஆவணங்கள் கிளாசிபைடு ஆவணங்கள், ரகசிய ஆவணங்களாகும் ஆகவே அவற்றை வெளியிடுவது அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறுவதாகும்.

“ஆகவே அந்த ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுபவர்கள் அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவர்கள் ஆவார்கள், மேலும் நீதிமன்ற அவமதிப்பும் இதில் அடங்கும்” என்று அட்டர்னி ஜெனரல் குறிப்பிட்டார்.

Trending News