#BREAKING: அயோத்தியில் ராமர் கோயிலுக்கான திட்டம் தயார்: மோடி!

ராமர் கோயில் கட்டுவதற்க்காக "ஸ்ரீ ராம ஜென்மபூமி திரத் ஷேத்ரா" என்ற அறக்கட்டளை உருவாக்கபட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்!!

Last Updated : Feb 5, 2020, 12:29 PM IST
    1. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
    2. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைத்துள்ள தகவலை நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
    3. அறக்கட்டளை அமைத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    4. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தி ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை அமைக்க ஒப்புதல்.
    5. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டமும் தயாராகிவிட்டது.
    6. அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும்.
#BREAKING: அயோத்தியில் ராமர் கோயிலுக்கான திட்டம் தயார்: மோடி! title=

ராமர் கோயில் கட்டுவதற்க்காக "ஸ்ரீ ராம ஜென்மபூமி திரத் ஷேத்ரா" என்ற அறக்கட்டளை உருவாக்கபட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்!!

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கான விவரங்களை இறுதி செய்ய மத்திய அரசு ஒரு சுயாதீன அறக்கட்டளையை அமைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (பிப்ரவரி 5, 2020) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். "ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை" என்ற அறக்கட்டளையை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி உருவாகியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் கூறுகையில்... “எனது அரசாங்கம் ஸ்ரீ ராம ஜென்ம்பூமி தீர்த்த ஷேத்ரா என்னும் அறக்கட்டளையை உருவாக்க முடிவெடுத்துள்ளது. இந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கும் அது சம்பந்தமான மற்ற விவரங்கள் குறித்தும் சுதந்திரமாக முடிவெடுக்கும். அயோத்தியில் மிகப் பெரும் ராமர் கோயில் கட்டுவதற்கு நாம் அனைவரும் நமது ஆதரவினைத் தருவோம்,” என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சொல்ல, “ஜெய் ஸ்ரீ ராம்” என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கடந்த நவம்பர் மாதம், ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பை அளித்தது. அதன்படி, பிரச்னைக்குரிய இடத்தை ராம் லல்லா தரப்புக்கு வழங்கியது நீதிமன்றம். வழக்கில் இன்னொரு தரப்பான சன்னி வாக்ஃப் அமைப்புக்கு, அயோத்தில் 5 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கச் சொல்லி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே, அறக்கட்டளை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

அயோத்தியில் வாக்ஃப் அமைப்புக்கு, நிலம் வழங்க உத்தர பிரதேச அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம், சீக்கியம், கிறிஸ்தவம், புத்த மதம், பார்சி அல்லது ஜெய்ன் அனைவரும் ஒரு குடும்பத்தின் அங்கம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி அவசியம். அனைவருக்கும் வளர்ச்சி என்பதை கொள்கையாகக் கொண்டே அரசு செயல்பட்டு வருகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.   

 

Trending News