சிபிஐ சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து ராகேஷ் அஸ்தானா நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
சிபிஐயின் தலைமை அதிகாரியான அலோக் வர்மா, அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரி ராகேஷ் அஸ்தானா இருவருக்குமிடையே முரண்பாடு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மத்திய அரசால் கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து மீண்டும் சிபிஐ இயக்குனராக பதவி ஏற்றார். பின்னர் அவரை மத்திய அரசு தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமித்ததால், அவர் பணியில் இருந்து விலகி விட்டார்.
இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இந்தநிலையில், ராகேஷ் அஸ்தானா நேற்று திடீரென்று சிபிஐ சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் சிபிஐ இணை இயக்குனரான அருண்குமார் சர்மா, டி.ஐ.ஜி. மனிஷ் குமார் சின்கா, சூப்பிரண்டு ஜெயந்த் ஜே நாயக்னாவரே ஆகிய 3 அதிகாரிகளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.