இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) பதவியேற்றுக்கொண்டார்!
இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக இருந்த ஜெனரல் நாரவனே, ஜெனரல் பிபின் ராவத்துக்குப் பின், இந்திய இராணுவத்தின் 28-வது தளபதியாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். இராணுவத் தளபதியாக இருந்து தனது பதவிகாலம் முடிவடைந்த நிலையில், ஜெனரல் ராவத் இந்தியாவின் முதல் பாதுகாப்புத் தளபதியாக திங்கள்கிழமை (டிசம்பர் 30) நியமிக்கப்பட்டார், இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பதவியேற்றார்.
ஜெனரல் நாரவனே இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற நிலையில், விமானப்படைத் தலைவர் RKS படௌரியா, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் உள்ளிட்ட மூன்று சேவைத் தலைவர்களும் இப்போது தேசிய பாதுகாப்பு அகாடமியின் 56-வது படிப்பிலிருந்து வந்தவர்கள் என்ற பெருமை பெற்றுள்ளனர்.
General Manoj Mukund Naravane takes over as the 28th Chief of Army Staff, succeeding General Bipin Rawat. pic.twitter.com/ojJFCBIheA
— ANI (@ANI) December 31, 2019
இந்திய இராணுவத்துடன் தனது 37 ஆண்டுகால சேவையில், ஜெனரல் நாரவனே ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் அமைதி, களம் மற்றும் மிகவும் சுறுசுறுப்பான எதிர் கிளர்ச்சி சூழல்களில் பல கட்டளை மற்றும் பணியாளர் நியமனங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு, நாரவனே கிழக்கு இராணுவத் தளபதியாக இருந்தார், இது சீனாவுடனான இந்தியாவின் கிட்டத்தட்ட 4,000 கி.மீ எல்லையை கவனித்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் ஒரு ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியனுக்கும், கிழக்குப் பகுதியில் ஒரு காலாட்படைப் படைக்கும் கட்டளை அதிகாரியாக செயல்பட்டார்.
மூலோபாயம், செயல்பாட்டுக் கலை, தந்திரோபாயங்கள், தளவாடங்கள், பயிற்சி மற்றும் மனித வள மேம்பாடு தொடர்பான கருத்துகள் மற்றும் கோட்பாடுகளை உருவாக்கி பரப்புவதற்கு பொறுப்பான சிம்லாவை தளமாகக் கொண்ட இராணுவ பயிற்சி கட்டளைக்கும் அவர் தலைமை தாங்கினார்.
இலங்கையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையின் ஒரு அங்கமாகவும் இருந்த அவர், மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்று ஆண்டுகள் இந்தியாவின் பாதுகாப்பு இணைப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.