தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்!

மாநில அரசு அறிவிப்பு.

Last Updated : Feb 16, 2019, 04:56 PM IST
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு  அரசு பேருந்துகளில் இலவச பயணம்!  title=

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராஜஸ்தானை சேர்ந்த 5 சிஆர்பிஎஃப் வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ராஜஸ்தான் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்: மாநில அரசு அறிவிப்பு.

கடந்த  வியாழக்கிழமை ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. இந்நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் ராஜஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் பலியானார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இழப்பீடு தொகையை ரூ. 50 லட்சமாக உயர்த்தி ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் அசோக் கெஹ்லாட் வெளியிட்ட செய்தியில்  ‘‘தேசத்தை பாதுகாக்கும் பணியில் நம் வீரர்கள் மிக பெரிய தியாகத்தை செய்துள்ளனர். இந்த தருணத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும்’’

‘‘அதற்காக வீரர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு தொகை ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் பணமாக வழங்கப்படும். அல்லது ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் இந்திரா காந்தி கால்வாய் திட்டத்தின் கீழ் ஆறரை ஏக்கர் நிலம் அல்லது அரசின் வீட்டு வாரிய குடியிருப்பில் ஒன்று வழங்கப்படும்’’

‘‘மேலும் உயிரிழந்த குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகள் படிப்பதற்கான கல்வி உதவிதொகை, வீரர்களின் பெற்றோர்களுக்கு 3 லட்சம் ரூபாய் உள்ளிட்ட பல உதவிகளை மாநில அரசு வழங்கும்’’ என்று முதல்வர் அசோக் கெஹ்லாட் தெரிவித்தார்.

மேலும், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராஜஸ்தானை சேர்ந்த 5 சிஆர்பிஎஃப் வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ராஜஸ்தான் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வரவும் தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடையவும் இறைவனிடம் பிராத்திப்பதாக அசோக் கெஹ்லாட் கூறினார்.  

 

Trending News