கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா பரவல் (Corona Pandemic) தொடங்கிய நிலையில், முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா (PM Garib Kalyan Yojana) என்னும் ஏழைகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் மூன்று மாதங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2021 நவம்பர் மாதம், அதாவது தற்போது வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ALSO READ | தீபாவளி நாளில் சோகம்! பட்டாசுகள் வெடித்ததில் தந்தை-மகன் உடல் சிதறி பலி!
மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன், கூடுதலாக இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது என்றும், தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதோடு, வெளிச் சந்தையில் உணவுப் பொருட்கள் விற்பனையும் அதிகரித்து உள்ளது. எனவே, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதை மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என அவர் கூறினார்.
ALSO READ | கேதார்நாத்தில் ஆதிசங்கரரின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR