Free Vaccine: 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசியா? அரசு சொல்வது என்ன?

மீதமுள்ள மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்ட பிறகு, இதைப் பற்றிய மதிப்பீடு செய்யப்படும் என்று பால் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 10, 2021, 04:03 PM IST
  • கோவிட் தடுப்பூசிகளைப் பெற 30 கோடி இந்திய மக்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது.
  • நாட்டில் COVID-19 சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் அளவு 1.41 லட்சமாகக் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,05,61,608 ஆக உயர்ந்துள்ளது.
Free Vaccine: 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசியா? அரசு சொல்வது என்ன? title=

புதுடில்லி: 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் செயல்முறை தொடங்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள இவர்களுக்கும் சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களைப் போல தடுப்பூசிகள் இலவசமாக அளிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது நாடு தழுவிய தடுப்பூசி செயல்முறையின் ஆரம்ப கட்டம் நடைபெற்று வருகிறது.

கோவிட் -19 க்கான தேசிய பணிக்குழுவின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் புதன்கிழமை கூறிய போது, தடுப்பூசியின் மூன்றாவது முன்னுரிமை பிரிவில் வரும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி போடுவது குறித்த எந்த முடிவும் இன்னும் மத்திய அரசால் எடுக்கப்படவில்லை என்றார். இவர்களுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மாநில தலைவர்களுடனான சந்திப்புகள் விரைவில் நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட் தடுப்பூசிகளைப் பெற 30 கோடி இந்திய மக்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. அரசாங்கம் இந்த பரந்த அளவை மூன்று குழுக்களாகப் பிரித்துள்ளது. இதில் 1 கோடி சுகாதாரப் பணியாளர்கள், 2 கோடி முன்னணி தொழிலாளர்கள் மற்றும் கோவிட் -19 க்கு ஆளாக அதிக சாத்தியக்கூறுகள் உடைய 50 வயதிற்கு மேற்பட்ட 27 கோடி மக்கள் உள்ளனர்.  

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3 கோடியைக் கொண்ட சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு அரசாங்கம் இலவச தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதற்கிடையில், COVID-19 தடுப்பூசிகளைப் பெற 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் ஏன் முன்னுரிமை அளித்தது என்பதையும் பால் விளக்கினார். கோவிட் காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 78% 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற செய்தியையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

"ஒருவர் 50 வயதை அடைந்ததும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற 70% அடிப்படை உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மேலும் எந்தவிதமான வைரஸ் தொற்றுநோய்களுக்கும் இந்த வயதினர் எளிதில் ஆளாக நேரிடும்" என்று பால் கூறினார்.

ALSO READ: India Corona Updates: நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது

மீதமுள்ள மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி (Vaccine) போட்டு முடிக்கப்பட்ட பிறகு, இதைப் பற்றிய மதிப்பீடு செய்யப்படும் என்று பால் தெரிவித்தார்.

இவை அனைத்திற்கும் இடையில், நாட்டில் COVID-19 சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் அளவு 1.41 லட்சமாகக் குறைந்துள்ளது. இது மொத்த நோய்த்தொற்றுகளில் வெறும் 1.30 சதவீதமாகும். 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 5000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சையில் உள்ளதாகப் பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

தமன் மற்றும் டியு மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய இடங்களில் யாரும் தற்போது சிகிச்சையில் இல்லை. 24 மணி நேர இடைவெளியில் மொத்தம் 11,067 பேர் புதிதாக தொற்றால் பாதிக்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 13,087 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது மொத்த கேஸ்லோடில் இருந்து 2,114 நோயாளிகளின் எண்ணிக்கை குறைய வழிவகுத்தது என்றும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளில் அதிகமானோர், அதாவது சுமார் 71 சதவீதம் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் (யுடி), ஜார்க்கண்ட், புதுச்சேரி, மணிப்பூர், நாகாலாந்து, லட்சத்தீவு, மேகாலயா, சிக்கிம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லடாக் (யுடி), மிசோரம், அருணாச்சல பிரதெசம், திரிபுரா, தாதர் மற்றும் நாகர் ஹவேலி ஆகிய பத்தொன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 24 மணி நேரத்திற்குள் தொற்றால் எந்த மரணமும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து (Coronavirus) குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,05,61,608 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ: உலகளவில் தடுப்பூசி பணியில் முதலிடத்தில் இந்தியா; 19 நாட்களில் 45 லட்சம் தடுப்பூசி ..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News