முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது!
பாஜகவின் மூத்த தலைவர்களுல் ஒருவரான அருண் ஜெட்லி உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி காலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதே நாள் இரவில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு பிறகு அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்த எந்த விளக்க அறிக்கையையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடாமலே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அருண் ஜெட்லியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருந்து வரும் அருண் ஜெட்லி சிகிச்சை பெரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே ஆகியோர் சென்று சந்தித்துள்ளார். அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அருண் ஜேட்லியின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோரும் அவரைப் பற்றி நலம் விசாரித்தனர். கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அருண் ஜேட்லீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்று நலம் பெற வேண்டினர்.
இந்நிலையில், ஜெட்லியின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில்; செயற்கை சுவாச கருவி உதவியுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென தகவல்கள் கூறினாலும் மருத்துவமனை சார்பில், எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஜெட்லிக்கு தற்போது, 66 வயது. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தாலும், சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பின், உடல்நலம் குன்றிவிட்டார்.