உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 5, 2020, 12:14 AM IST
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி title=

புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் வேகமாக அதிகரித்து வருகின்றன. பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (Ranjan Gogoi) கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அயோத்யா ராமர் கோயில் வழக்கின் இறுதி தீர்ப்பை 2019 நவம்பரில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் அளித்தது என்பதை நான் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்.

ரஞ்சன் கோகோய் (Ranjan Gogoi) முன், நாட்டின் இரண்டு மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அமித் ஷா (Amit Shah) ஆகியோரும் கோவிட் -19 நோய் பாதித்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளன. தர்மேந்திர பிரதான் (Dharmendra Pradhan) தனது பணியாளர் அதிகாரிக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்டதை அடுத்து, அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

ALSO READ | மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரொனா தொற்று உறுதி

தர்மேந்திர பிரதான் முன் அமித் ஷா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார:

தர்மேந்திர பிரதனுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். நோய்த்தொற்று ஏற்பட்ட தகவல் கிடைத்தவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit shah) குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முற்றிலும் நலமாக உள்ளதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ | மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் முதல் ஆளுநருக்கும் கொரோனா தொற்று:
இரண்டு மத்திய அமைச்சர்களைத் தவிர, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா (B. S. Yediyurappa) மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாலி லால் புரோஹித்தும் (Banwarilal Purohit) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ALSO READ | Ex CJI ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்

Trending News