எச்சரிக்கை! இந்திய இராணுவத்திலும் நுழைந்தது கொரோனா வைரஸ்...

இந்திய இராணுவத்தில் குடியேறியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, லேவைச் செர்ந்த ஒரு சிப்பாய் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 18, 2020, 07:26 AM IST
எச்சரிக்கை! இந்திய இராணுவத்திலும் நுழைந்தது கொரோனா வைரஸ்... title=

இந்திய இராணுவத்தில் குடியேறியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, லேவைச் செர்ந்த ஒரு சிப்பாய் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது லே சிப்பாய்க்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்., இந்திய இராணுவத்தின் முதல் கொரோனா வழக்கு பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை விடுப்பில் இருந்த சிப்பாயின் தந்தை ஈரானில் சென்று திரும்பியதாகவும், அவரின் தந்தை வழியே இவருக்கு தொற்று பரவியிருக்கலாம் எனவும் தெரிகிறது.

இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) செவ்வாயன்று இந்தியா தற்போது 2-வது கட்டத்தில் உள்ளது, வைரஸ் தொற்றுநோயின் 3-வது கட்டத்தில் இல்லை என்று வலியுறுத்தியது. நிலைமையைச் சமாளிக்க ICMR சோதனைக்கு அரசுத் துறையில் 72 செயல்பாட்டு ஆய்வகங்கள் உள்ளன என, ICMR இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் இந்த வார இறுதிக்குள் மேலும் 49 பேர் செயல்பாடுகளில் ஈடுப்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும், இந்தியாவில் நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 137-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொடிய வைரஸ் பரவுவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை வலியுறுத்தி நாட்டின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) 85 ரயில்களை ரத்து செய்துள்ளது. ரயில்வே கேட்டரிங் ஊழியர்களுக்கு மண்டல ரயில்வேக்கு வழிகாட்டுதல்களின் தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை கொண்டு இந்திய ரயில்வேயில் உணவு கையாளும் தொழிலில் ஈடுபட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில், இன்று வரை பதிவாகியுள்ள நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை 198,102-ஆக பதிவாகியுள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை 7950 எட்டியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில்., 3 இறப்புகள் உள்பட 137 வழக்குகள் பதிவாகியுள்ளது.

Trending News