மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்: நாளை டெல்லி பேரணி

Farmers Protest: மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் அடங்கிய குழு, சண்டிகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காவது சுற்று பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளிடம் எம்எஸ்பி குறித்த ஒரு  திட்டத்தை முன்வைத்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2024, 10:27 AM IST
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • இன்று விவசாயிகள் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்கிறது.
  • விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்: நாளை டெல்லி பேரணி title=

டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று விவசாயிகள் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்கிறது. விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) அரசு நிறுவனங்களிடமிருந்து பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான மத்திய அரசின் திட்டத்தை விவசாயிகள் தலைவர்கள் திங்களன்று நிராகரித்தனர். இதனால் விவாசாயிகளுக்கு நன்மை ஏற்படாது என்று தெரிவித்த விவசாயிகள், பிப்ரவரி 21 புதன்கிழமை தேசிய தலைநகருக்குள் பேரணியாக நுழையவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கிசான் மஸ்தூர் மோர்ச்சா அமைப்பின் தலைவர் சர்வான் சிங் பந்தேர், பஞ்சாப் எல்லையான ஷம்புவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “எங்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், அல்லது எல்லையில் உள்ள தடுப்புகளை அகற்றி டெல்லிக்கு சென்று நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.” என்று கேட்டுக்கொண்டார். 

விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன? 

விவசாயிகல் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், “எங்கள் இரு மன்றங்களிலும் மத்திய அரசின் (Central Government) முன்மொழிவுகள் பற்றி விவாதித்த பிறகு, அரசின் இந்த ஆலோசனைகளால் விவசாயிகளுக்கு எந்த நலனும் இல்லை என்று முடிவு செய்துள்ளோம். அரசின் இந்த திட்டத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.” என்று கூறினார். 

மேலும் படிக்க | பெண்ணின் சீட்டை ஆக்கிரமித்த நபர்... உடனே தீர்த்துவைத்த போலீஸ் - ஆனாலும் ரயில்வேக்கு தர்ம அடி!

'டெல்லி பேரணி’ பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், “பிப்ரவரி 21ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியை நோக்கி அமைதி பேரணி நடத்துவோம். இது குறித்து அரசாங்கம் இப்போதே முடிவெடுக்க வேண்டும். இதில் மேலும் விவாதம் தேவையில்லை. அரசு முன்மொழிந்துள்ள திட்டத்தில், எங்களுக்கு பலனளிக்கக்கூடிய எதுவும் இல்லை. நான்காவது கட்ட பேச்சுவார்த்தையில், பருப்பு கொள்முதல் செய்ய அரசு உத்தரவாதம் அளித்தால், கருவூலத்துக்கு ரூ.1.50 லட்சம் கோடி கூடுதல் சுமை ஏற்படும் என, மத்திய அமைச்சர்கள் கூறினார்கள்.” என்று தெரிவித்தார். 

முன்னதாக, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் அடங்கிய குழு, சண்டிகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காவது சுற்று பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளிடம் எம்எஸ்பி குறித்த ஒரு  திட்டத்தை முன்வைத்தது.

இணைய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன 

இதற்கிடையில், ஹரியானாவில் மீண்டும் இணையத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மொபைல் சேவைகள், இணைய சேவை மற்றும் அதிக எண்ணிக்கையிலான எஸ்எம்எஸ் அனுப்பும் வசதிக்கு இருந்த தடை திங்களன்று மேலும் ஒரு நாளைக்கு நீட்டிக்கப்பட்டது. அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய ஏழு மாவட்டங்களில் தடை உள்ளதாக மாநில அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. முன்னதாக, பிப்ரவரி 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மொபைல் இணைய சேவைகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | பாகிஸ்தான் பொருளாதாரத்தை விஞ்சிய ‘சில’ டாப் இந்திய நிறுவனங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News