ISRO: ககன்யானின் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி; எலான் மஸ்க் வாழ்த்து

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2021, 10:52 AM IST
ISRO: ககன்யானின் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி; எலான் மஸ்க் வாழ்த்து title=

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எனப்படும் இஸ்ரோ ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும்  விகாஸ் இன்ஜின் பரிசோதனை தமிழ்நாட்டின்நெல்லையிலுள்ள மகேந்திரகிரி இஸ்ரோ (ISRO)மையத்தில் இன்று பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "GSLV MkIII வாகனத்தின் திரவ ஆற்றல் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்த பரிசோதனையில் 240 நொடிகளுக்கு இன்ஜின் இயக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தபடியே பரிசோதனை முடிவுகள் இருந்தன" என அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | குறைந்த செலவில் ISRO உருவாக்கியுள்ள நவீன வெண்டிலேட்டர்கள்

இஸ்ரோவின் (ISRO) இந்த பரிசோதனை வெற்றி தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் SpaceX நிறுவன தலைவர் எலான் மஸ்க் Elon Musk வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு இந்திய வீரர்கள் தற்போது ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | உலகளாவிய 5G நிலையங்களில் 70% எங்களிடம் தான் உள்ளது: சீனா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News