சீனாவைப் போல இந்தியாவிலும் மின்சார நெருக்கடி வருமா? நிலக்கரி இருப்பு குறைவு

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் வீடுகளில் மின்சாரம் கூட இல்லாமல் போகலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2021, 09:34 AM IST
சீனாவைப் போல இந்தியாவிலும் மின்சார நெருக்கடி வருமா? நிலக்கரி இருப்பு குறைவு title=

புது டெல்லி: பண்டிகை காலம் வரவுள்ள நிலையில் நாட்டில் நிலக்கரி நெருக்கடி அதிகரித்து வருகிறது. நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை தீவிரமடைந்தால், உங்கள் வீடுகளில் மின்சாரம் கூட இல்லாமல் போகலாம். உண்மையில், நாட்டில் உள்ள 64 பிட்ஹெட் அல்லாத மின் உற்பத்தி நிலையங்களில் நான்கு நாட்களுக்கு குறைவான நிலக்கரி இருப்பு உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்க தரவுகளின்படி, இந்த மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு தீர்ந்துவிட்டது, வரும் மூன்று-நான்கு நாட்களில் மொத்த கையிருப்பும் தீர்ந்துவிடும்.

அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி இருப்பு பற்றிய மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) சமீபத்திய அறிக்கையில், அக்டோபர் 3 ஆம் தேதி நிலவரப்படி இதுபோன்ற 25 மின் நிலையங்களில் ஏழு நாட்களுக்கு குறைவான நிலக்கரி இருப்பு இருப்பது தெரியவந்தது. குறைந்தது 64 அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு குறைவான எரிபொருள் உள்ளது. தினசரி அடிப்படையில் 165 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 135 மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்புக்களை சிஇஏ கண்காணிக்கிறது.

அக்டோபர் 3 ஆம் தேதி நிலவரப்படி, 135 ஆலைகளில் மொத்தம் 78,09,200 டன் நிலக்கரி இருப்பு உள்ளது. இது நான்கு நாட்களுக்கு போதுமானது. அதேவேளையில், 135 ஆலைகளில் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இல்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இருப்பினும், இரண்டு-மூன்று நாட்களில் நிலக்கரி தட்டுப்பாடு நீங்கி விடும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் மின் உற்பத்திக்கு நிலக்கரி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கும் ‘No Petrol’; 7 மணி நேர காத்திருப்பு வீணானது..!

நிலக்கரி பற்றாக்குறையால் நான்கு மின் உற்பத்தி அலகுகள் நிறுத்தப்பட்டன:
நாட்டில் நிலக்கரி நெருக்கடி மாநிலத்தின் மின் உற்பத்தி அலகுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஹர்துகஞ்ச் (அலிகார்) மற்றும் பரீக்ஷா (ஜான்சி) ஆகிய இரண்டு யூனிட்களில் இருந்து மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற நிலக்கரி எரிபொருள் உற்பத்தி அலகுகளும் குறைந்த திறனில் செயல்படுகின்றன. குறைந்த உற்பத்தி காரணமாக, மின் பற்றாக்குறையை சமாளிக்க நிர்வாகம் கூடுதல் மின்சாரம் வாங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் ஒரு 110 மெகாவாட் மற்றும் ஒரு 250 மெகாவாட் ஹர்துகஞ்ச் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு 250 மெகாவாட் திறன் கொண்ட மூன்றாவது அலகு 100 மெகாவாட் குறைவான கொள்ளளவில் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில், பரீக்ஷாவின் 210 மற்றும் 250 மெகாவாட் திறன் கொண்ட ஒரு யூனிட்டிலிருந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு மீதமுள்ள இரண்டு அலகுகள் 130 மெகாவாட் திறனுடன் இயங்குகின்றன.

நிலக்கரி பிரச்சனை தொடர்ந்தால் மின் உற்பத்தி நிறுத்தப்படும்:
ஓப்ராவின் அலகுகளில் நிலக்கரி இருப்பு நான்கு நாட்களும், அன்பாராவின் அலகுகள் மூன்று நாட்களும் மட்டுமே இருப்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. விரைவில் நிலக்கரி பற்றாக்குறையை சரிசெய்ய வில்லை என்றால், இங்கே உற்பத்தியும் நிறுத்தப்படலாம். நிலக்கரி கையிருப்பை குறைந்ததற்கு பவர் கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் குறைபாடுகள் தான் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News