UP Opinion Poll: MATRIZE அமைப்புடன் இணைந்து ஜீ நியூஸ் தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. இதில் பாஜக சொல்வதுபோல, அந்த கட்சி தலைமையிலான NDA கூட்டணிக்கு 400 தொகுதிகள் கிடைக்காது. ஆனால், 370 தொகுதிகளை கைப்பற்றலாம். இந்த அண்மைக் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 377 இடங்கள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமான அலை வீசுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் பின்னடவை சந்திக்கும் இந்திய கூட்டணி 94 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
ஜனநாயக திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன, நாடு முழுவதும் தேர்தல் களைகட்டிவிட்டது. அனைத்து கட்சிகளும் தங்களின் முழு பலத்தையும் ஒன்றிணைத்து தேர்தல் வியூகங்கள் அமைத்து வருகின்றன. இதற்கிடையில், அரசியல் வியூகங்களும் கருத்துக் கணிப்புகளும் மறுபுறம் தொடங்கிவிட்டன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, எந்தக் கட்சிக்கு தேர்தல் களம் சாதகமாக இருக்கிறது என்ற கணிப்பை MATRIZE மற்றும் ஜீ நியூஸ் இணைந்து நடத்தியது. இதில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்திருக்கிறது.
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட காலகட்டம்
பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 27 வரை ஜீ நியூஸ்க்காக MATRIZE இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது, இதில் மக்களவையின் 543 தொகுதிகள் குறித்து 1,67,843 பேரிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. 87 ஆயிரம் ஆண்களும், 54 ஆயிரம் பெண்களும் கலந்துக் கொண்ட கருத்துக்கணிப்பில் 27 ஆயிரம் முதல்முறை வாக்காளர்களின் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன.
கருத்துக்கணிப்பு முடிவுகளில், இதில் 2 சதவீதம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யலாம். இது பொதுமக்களின் தேர்தல் தொடர்பான கருத்துக்கள், யார் வெற்றி பெறலாம் என்ற மக்களின் மனோநிலையை பிரதிபலிக்கும் ஒரு யூகங்களே என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறோம்.
இந்த கருத்துக்கணிப்பு எந்த வகையிலும் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் முயற்சியாக கருதக்கூடாது. எந்த மாநிலத்தில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற மக்களின் கருத்துக்களை தெரிந்துக் கொள்வோம்.
தமிழ்நாடு
ஜீ நியூஸ் மேட்ரிஸின் கருத்துக் கணிப்பின்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 36 இடங்களில் வெற்றி கிடைக்கலாம் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு தொகுதியில் கால் பதிக்கலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
இந்திய கூட்டணி 36
NDA 1
பிற கட்சிகள் 2
கேரளா (20 இடங்கள்)
இந்திய கூட்டணி 20
பாஜக 0
கர்நாடகா
NDA (BJP+JDS) 23
காங்கிரஸ் 5
பிற கட்சிகள் 0
ஆந்திரா (25 இடங்கள்)
YSRCP 19
TDP 6
பாஜக 0
மேலும் படிக்க | ஜார்கண்டில் பயங்கர ரயில் விபத்து... தண்டவாலத்தில் சென்றவர்கள் மீது மோதிய ரயில்
தெலுங்கானா (17 இடங்கள்)
பாஜக 5
காங்கிரஸ் 9
பிஆர்எஸ் 3
AIMIM 3
வடகிழக்கில் பாஜக ஆதிக்கம்
முழு வடகிழக்கிலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் செல்வாக்கு இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
‘மோடி மேஜிக்’ வேலை செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் மாநிலங்கள்
அஸ்ஸாமின் புள்ளிவிவரங்கள் பாஜகவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் 11ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
Zee News Matriz இன் கருத்துக்கணிப்பின்படி, நாடாளுமன்றத் தேர்தல் 2024, வடகிழக்கில் என்.டி.ஏவுக்கு 10 இடங்களையும், I.N.D.I.A. கூட்டணிக்கு 1 இடம் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அசாமில் என்டிஏ 11 இடங்களையும், ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணிக்கு 1 இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டிகர், அந்தமான், கோவா மற்றும் தாத்ரா-நகர் ஹவேலியில் இந்திய கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. கருத்துக் கணிப்பின்படி, சண்டிகர், அந்தமான், கோவா மற்றும் தாத்ரா-நகர் ஹவேலி ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
லடாக்-லட்சத்தீவு
Zee News Matriz கருத்துக்கணிப்பின்படி, லடாக்கில் NDA வெற்றிபெறலாம், லட்சத்தீவில் I.N.D.I.A வெற்றிபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ