இந்த வருடம் அமர்நாத் யாத்திரை இல்லை... அமர்நாத் ஆலய வாரியம் அறிவிப்பு..!!

அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 21, 2020, 08:33 PM IST
  • ஜம்மு - தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலையில், இயற்கையாக உருவாகியுள்ள பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யத்திரை மேற்கொள்வார்கள்.
  • கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என ஆலய போர்ட் தெரிவித்தது.
  • பக்தர்கள் பூஜைகளை தரிசன செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்படலாம் என கூறப்படுகிறது
இந்த வருடம் அமர்நாத் யாத்திரை இல்லை... அமர்நாத் ஆலய வாரியம் அறிவிப்பு..!!  title=

ஸ்ரீநகர்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது,

ஜம்மு - தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலையில்,  இயற்கையாக உருவாகியுள்ள பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யத்திரை மேற்கொள்வார்கள். 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ல் துவங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக தினமும் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 42 நாள் யாத்திரை 15 நாட்களாகவும் குறைக்கப்பட்டது.

ALSO READ | லாக்டவுனால் எந்த பயனும் இல்லை... நாளை முதல் இயல்பு நிலை: BS Yediyurappa

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில், அமர்நாத் ஆலய போர்டு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டு உள்ளது என்றும் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளதால், யாத்ரீகர்களின் பாதுகாப்பே முக்கியமானது எனவும் கூறப்பட்டுள்ளது.

யாத்திரை மேற்கொள்ளப்படும் பகுதிகளிலும் கொரோனா பரவ வாய்ப்புள்ளைதை கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பூஜைகளை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், வழக்கமான பூஜைகள் ஆன் லைனில் ஒளிபரப்பப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ விமானத்தை பயன்படுத்திய முதல் மனிதன் இலங்கை வேந்தன் ராவணன்: இலங்கை அரசு

Trending News