முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் உடல் இயக்கம் சீராக உள்ளது. ஆனால், அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி தற்போது ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார் என மருத்துவர்கள் கூறினர்.
பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (Army's Research and Referral Hospital) அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்பொழுது அவருக்கு COVID-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, அவருக்கு நுரையீரல் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சிறப்பு மருத்துவர்கள் குழு, அவரது உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
சிறிது நாட்களுக்கு முன் அவரது உடல் நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மேலும் படிக்க | பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை: மருத்துவமனை அறிக்கை