AAP-யின் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா பாஜகவில் இணைந்தார்...

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா இன்று பாஜகவில் இணைந்தார்!! 

Last Updated : Aug 17, 2019, 01:01 PM IST
AAP-யின் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா பாஜகவில் இணைந்தார்... title=

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா இன்று பாஜகவில் இணைந்தார்!! 

கடந்த மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதால் அக்கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று பாஜக தலைவர்கள் மனோஜ் திவாரி, விஜய் கோயல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

முன்னாள் நெருங்கிய டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அழைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை இரவு ட்வீட் செய்திருந்தார். அதில், “நான் நாளை காலை 11 மணிக்கு பாஜகவில் சேர்கிறேன். டெல்லி மோடியுடன் நிற்கிறது.” என அவர் குறிப்பிட்டிருந்தார். 

ஆகஸ்ட் 2 ஆம் தேதி கபில் மிஸ்ரா டெல்லி சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்கம் 2019 ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வந்தது. கராவல் நகர் சட்டமன்ற தொகுதியை மிஸ்ரா பிரதிநிதித்துவப்படுத்தினார். மக்களவை 2019 தேர்தலின் போது, மிஸ்ரா பாஜகவுக்காக பிரச்சாரம் செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களித்திருந்தார். அதே நேரத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி இருவரும் டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். 

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சவ்ரப் பரத்வாஜ் பின்னர் "கபில் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு ஒன்றை அனுப்பினார்" என்று தில்லி சட்டமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபையின் தலைவரான கெஜ்ரிவாலும் சட்டமன்றத்திற்கு கடிதம் எழுதினார், "மிஸ்ரா சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என அதில் தெரிவித்திருந்தார். 

இதைதொடர்ந்து, சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மிஸ்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றம் செப்டம்பர் 4 ஆம் தேதி விசாரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

 

Trending News