அவிநாசி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏகே சசீந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கோவையில் நெடுஞ்சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி மோதிக்கொண்டதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருபத்தி மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரியுடன் மோதியது.
இந்நிலையில் அவிநாசி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள போக்குவரத்து துறை மந்திரி ஏகே சசீந்திரன் அறிவித்துள்ளார். மேலும் ஈரோடு மாவட்ட எல்லையில், திருப்பூர் போலீசார் கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஹேமராஜ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிதி முதற்கட்டமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், 2ம் கட்டமாக ரூ.8 லட்சம் வழங்கப்படும் என்று ஏகே சசீந்திரன் தெரிவித்துள்ளார்.