திருமணத்திற்கு மறுத்து இளைஞர் மீது, இளம்பெண் ஆசிட் வீச்சு!

காதலுக்கு பின் திருமணம் செய்ய மறுத்த ஆண் நண்பர் மீது டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Last Updated : Jun 17, 2019, 05:21 PM IST
திருமணத்திற்கு மறுத்து இளைஞர் மீது, இளம்பெண் ஆசிட் வீச்சு! title=

காதலுக்கு பின் திருமணம் செய்ய மறுத்த ஆண் நண்பர் மீது டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுநாள் வரை இளம்பெண்கள் மீது ஆசிட் வீசியதாக பல ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி விகாஸ்புரியை சேர்ந்த 19 வயது பெண் மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த  24 வயது ஆண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  சமீபத்தில் இவர்களது காதலை முறித்து கொள்ள ஆண் நண்பர் விரும்பியுள்ளார். ஆனால் அந்த பெண் அதனை ஏற்கவில்லை, மாறாக திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளார். 

இதனை அந்த ஆண் ஏற்க மறுக்க, தக்க சமயத்தில் அவரை பழிவாங்க இளம்பெண் திட்டமிட்டுள்ளார். இதனால் வழக்கம் போல் ஆண் நண்பருடன் அந்த பெண் பைக்கில் பின்னால் அமர்ந்தபடி சென்று, தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவரது முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதில் நிலைதடுமாறிய அவர் பைக்குடன் கீழே விழுந்தார். இதில் ஆசிட் யார் ஊற்றியது என்பது தெரியாத நிலையில் இருவரும் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் காவல்துறை விசாரணையில், இளம்பெண் தான் ஆணின் மீது ஆசிட் வீசியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இருவரும் பயணித்து கொண்டிருக்கும் போது, பெண் நண்பர் ஹெ ல்மெட்டை கழற்றும் படி கூறியுள்ளர். பின்னர் சரியான நேரம் பார்த்து இளைஞரின் மீது ஆசிட் வீசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Trending News