புது டெல்லி: நீதிமன்ற வளாகங்களில் மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் வாக்குறுதியை தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. அதாவது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற வளாகத்தில் மொஹல்லா கிளினிக்குகள் கட்ட வாக்குறுதியளித்ததை "கண்டனம் செய்கிறோம்". அதேநேரத்தில் எதிர்காலத்தில் அவர் மிகவும் கவனமாக பேச வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான கருத்துக்களுக்காக பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா மீது தேர்தல் ஆணையம் 24 மணி நேர தேர்தல் பிரச்சார தடையை விதித்துள்ளது. பர்வேஷ் வர்மா மீண்டும் கெஜ்ரிவாலை ஒரு பயங்கரவாதி என்று கூறியதோடு, டெல்லியில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார் என்றுகுற்றம் சாட்டினார். இதனையடுத்து அவர் இன்னும் ஒருநாள் உள்ள நிலையில், நாளை அவர் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது.
தேசிய தலைநகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களின் மையமாக இருந்த தென்கிழக்கு டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியை தேர்தல் ஆணையத்தின் குழு இன்று (புதன்கிழமை) பார்வையிட்டது. பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பிப்ரவரி 11 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிந்து விடும். அதற்கு அடுத்து வரும் 8 ஆம் தேதி வாக்குபதிவு மற்றும் அதன் முடிவுகள் 11 ஆம் தேதி அறிவிக்கப்படும். டெல்லி சட்டசபைக்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. தற்போது ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் 67 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.