பாதுகாப்பு அமைச்சர் (Defence Minister) ராஜ்நாத் சிங் (Rajnath Singh) சனிக்கிழமை அமர்நாத்தின் புனித குகைக் கோயிலுக்குச் (Amarnath Cave Temple) சென்று பிரார்த்தனை செய்தார்.
சிங் அங்குள்ள கோயில் வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.
அமர்நாத் குகை இந்து மதத்தின் புனிதமான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த சவாலான மலைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடாந்திர யாத்திரை மேற்கொள்கின்றனர்.
ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீருக்கான (Jammu Kashmir) தனது அரசு முறைப் பயணத்தின் இரண்டாவது நாளில் அமர்நாத் புனித குகைக் கோயிலுக்கு சென்றுள்ளார்.
முன்னதாக, வெள்ளியன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீரில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழ்நிலையை உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் எந்தவொரு "தவறான செயலுக்கும்" பொருத்தமான பதிலைக் கொடுக்குமாறு அவர் ஆயுதப்படைகளிடம் கூறினார்.
பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) கடுமையான விழிப்புணர்வைக் கடைப்பிடிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் ஆயுதப்படைகளைக் கேட்டுக் கொண்டனர்.
ALSO READ: பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று அமர்நாத் கோயிலுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்
முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை, பாதுகாப்பு அமைச்சர் ஒரு உயர் மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு, ஜெனரல் ராவத், ஜெனரல் நர்வானே, லெஃப்டினண்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் டைரக்டர் ஜெனரல் தில்பாக் சிங் மற்றும் பாதுகாப்புப் படை, சிவில் ஏஜன்சிகள் மற்றும் உளவுத் துறையின் மேலும் பல மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல்கள் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: எல்லை பாதுகாப்பு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் லடாக் வருகை