முகமது அலி ஜின்னா பிரதமராகியிருந்தால் இந்தியா பிரிந்து இருக்காது என திபெத்திய தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்!
கோவா மாநில மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களின் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய திபெத்திய தலைவர் தலாய்லாமா, பிரதமர் பதவியினை ஜவர்கலால் நேரு அவர்களுக்கு அளிக்காமல் முகமது அலி ஜின்னாவிற்கு, மகாத்மா காந்தி அவர்கள் அளித்திருந்தால் இந்தியாவிடம் இருந்து பாக்கிஸ்தான் பிரிந்து இருக்காது என தெரிவித்துள்ளார்.
#WATCH Dalai Lama says, "Mahatma Gandhi ji was very much willing to give Prime Ministership to Jinnah but Pandit Nehru refused." pic.twitter.com/WBzqgdCJaJ
— ANI (@ANI) August 8, 2018
மேலும் அவர் தெரிவிக்கையில்... அப்போதைய காலக்கட்டத்தில் ஜின்னாவிற்கு பிரதமர் பதவியினை வழங்கவே காந்தி விரும்பினார், ஆனால் நேரு இந்த விஷயத்தில் தலையிட்டு தான் பிரதமராக பதவியேற்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மகாத்மா காந்தியின் திட்டமானது நிறைவேறியிருந்தால், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே இருக்கும். நேருவை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும், மிகவும் அனுபவம் வாய்ந்தவர், ஆனால் சில தவறுகளும் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கும் முஸ்லீம் மக்களிடம் இருக்கும் பிரிவினையை கலைந்து ஒற்றுமையினை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்... "நிலப்பிரபுத்துவ முறையைவிட ஜனநாயக முறையே நல்லது, அதில் முடிவெடுக்கும் அதிகாரம் சிலரிடம் மட்டுமே உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. என குறிப்பிட்டுள்ளார்.