விலை உயர்ந்து கொண்டே போகும் கேஸ் சிலிண்டர்!!

மானியம் மற்றும் மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ஐ.ஓ.சி.எல் நிறுவனம் உயர்த்தி உள்ளது!

Last Updated : Jul 1, 2018, 09:54 AM IST
விலை உயர்ந்து கொண்டே போகும் கேஸ் சிலிண்டர்!! title=

மானியம் மற்றும் மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ஐ.ஓ.சி.எல் நிறுவனம் உயர்த்தி உள்ளது!

சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்நிலையில், மாதத்தின் முதல்நாளையடுத்து இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.  

இது குறித்து இந்தியன் ஓயில் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நினயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.2.83 அதிகரித்து ரூ.484.67 ஆக விலையை நிர்ணயித்துள்ளது. மேலும், மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.58 அதிகரித்து 770.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

Trending News