அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பிறந்த தினத்தில், காங்கிரஸ் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள ஊடகங்கள் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இளைய தலைமுறையை சென்றடைய, யூ ட்யூப் சேனலை தொடங்க உள்ளதாக, தில்லியில் உள்ள காங்கிரஸ் (Congress) தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் (Congress) 'ஐஎன்சி டிவி' (INC TV) என்ற யூடியூப் சேனலை, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் நீரஜ் குந்தன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். எனினும், இந்த சேனல், வரும் 24ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளின் குரல்களை, ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்காத நிலையில், இந்த சேனலின் மூலம், கட்சியின் முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள், அன்றாட நடவடிக்கைகள் என கட்சியில் அனைத்து தகவல்கள் மற்றும் கருத்துக்களை இளைஞர்களிடையே கொண்டு சேர்க்க முடியும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும் கட்சிக்குள் இது தொடர்பாக சில அதிருப்தி குரல்களும் எழுந்துள்ளன. முதலாவதாக, யூடியூப் (Youtube) சேனலைத் தொடங்குவது பற்றி கட்சியை சேர்ந்த பலருக்கு தகவவலே தெரியவில்லை. இரண்டாவதாக, சில கட்சி உறுப்பினர்கள், ஒரு சேனலின் தேவை என்ன இருக்கிறது, இது வெற்றி பெறுமா, போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இருப்பினும்,கேரளா மற்றும் தமிழ்நாட்டில், கிராமப்புற மக்களுடன் ராகுல காந்தி கலந்துரையாடிய வீடியோக்கள், பெருமளவில் சென்றடைந்ததை கருத்தில் கொண்டு, ஐஎன்சி டிவி என்ற இந்த சமூக ஊடக சேனல் வெற்றிபெறக்கூடும் என்று கட்சி கருதுகிறது.
ரந்தீப் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜூன் கார்கே, கட்சியின் சமூக ஊடக குழு ஆகியோரின் யோசனையில் இந்த டிவி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக ஊடகமான Youtube-ல், பாஜக ஏற்கனவே Bharatiya Janata Party என்ற பெயரில் தனக்கென ஒரு சேனலை நடத்தி வருகிறது. அதை சுமார் 37 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR