உ.பி., மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பெருகி வரும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் புதிய முயற்சியை எடுக்கப்பட்டு உள்ளது.
அரசுப்பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பேசிக்கொண்டிருந்தால், அதை புகைப்படம் எடுத்து அம்மாநில போக்குவரத்துறை வழங்கியுள்ள பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினால், புகார் அளித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில போக்குவரத்து துறை மந்திரி ஸ்வந்திரே தேவ் சிங் இந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், தவறு செய்யும் ஓட்டுனர் குறித்து புகார் அளிக்கும் அதிகாரம் பயணிகளுக்கு கிடைக்கும். இரண்டாவது ஓட்டுனர்களுக்கு இடையே பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.